கிருஷ்ணா நதியில் வேன் கவிழ்ந்து 25 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் பீஜப்பூர் அருகே கிருஷ்ணா நதியில் டெம்போ கவிழ்ந்ததில் அதில் பணம் செய்த 25 பேர்பலியாகிவிட்டனர்.
கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு டெம்போவில் கிருஷ்ணா நதியின் குறுக்கேகட்டப்பட்டுள்ள அலமாத்தி அணைக்கு வந்தனர். அணையை சுற்றிப் பார்த்துவிட்டு கூடலசங்கமா என்ற புனிதத்தலத்துக்குக் கிளம்பினர்.கிருஷ்ணா நதியின் குறுக்கே உள்ள பாலத்தில் அந்த டெம்போ சென்று கொண்டிருந்தபோது டிரைவர்கட்டுப்பாட்டை இழந்தார். இதில் அந்த டெம்போ தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது.
ஆற்றில் வெள்ளம் ஓடிக் கொண்டிருப்பதால் டெம்போ அடித்துச் செல்லப்பட்டது. இதில் 25 பேர் நீரில் மூழ்கிபலியாகிவிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்று தெரிகிறது. 6 பேர் நீந்தி கரைசேர்ந்தனர்.












Click it and Unblock the Notifications