சட்டசபையில் சூட்டைக் கிளப்பிய வீரப்பன்!
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் தொடர்பாக தமிழக சட்டசபையில் திமுக, அதிமுகஉறுப்பினர்களிடையே இன்று சூடான விவாதம் நடந்தது.
சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுஅதன் மீது விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு அதிமுக உறுப்பினர் சேகர்பாபுபேசுகையில்,சட்டம் ஒழுங்கு சரியில்லாவிட்டால் வளர்ச்சியை எட்ட முடியாது. தீவிரவாதிகள்நடமாட்டத்தை ஒழிக்க முடியாவிட்டால் நாட்டின் வளரச்சி தடைபடும்.
1991 முதல் 96ம் ஆண்டு வரையில் புரட்சித் தலைவி ஆட்சியில்தான்தீவிரவாதத்திற்கு தமிழகத்தில் முடிவு கடட்ப்பட்டது. தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டியபெருமை புரட்சித் தலைவிக்கு உண்டு.
அவரது ஆட்சிக் காலத்தில்தான் காவல்துறைக்கு நிறைய நிதி ஒதுக்கப்பட்டது. காவலர்வீட்டு வசதிக் கழகத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தார் புரட்சித் தலைவி அம்மா.
வேலை நியமனத் தடைச் சட்டம் இருந்தாலும் கூட புரட்சித் தலைவியின் ஆட்சியில்17,049 போலீஸார் நியமிக்கப்பட்டனர் என்றார்.
அப்போதுகுறுக்கிட்ட செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி,
போலீஸ் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று காவல்துறையை நவீனமாக்கியவர்கலைஞர்தான் என்று மறைந்த ஐஜி அருளே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் என்றார்.
தொடர்ந்து சேகர்பாபு பேசுகையில், 2004ம் ஆண்டுஅக்டோபர் மாதம் 19ம் தேதிஉலக அளவில் பரபரப்பாக பேசப்பட்ட வீரப்பனை சுட்டுக் கொன்றது புரட்சித்தலைவி ஆட்சிதான். பல வருடமாக சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பனைஒழித்தது புரட்சித் தலைவியின் ஆட்சிதான் என்றார்.
செங்கோட்டையன் (அதிமுக) பேசுகையில், வீரப்பனை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம்செய்தது திமுகவும் உங்களது டிவியும்தான் (சன் டிவி) என்றார்.
அப்போது மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு, அப்படிப்பார்த்தால் எத்தனையோ சமூக விரோதிகள் கூட உங்களது டிவியில் (ஜெயா டிவி)பிரசாரம் செய்திருக்கிறார்கள் என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், வீரப்பனுக்கு அதிமுக ஆட்சியில்தான்முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதாக சேகர்பாபு கூறுகிறார். தேடுதல் வேட்டை என்றபெயரில் எத்தனை அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது உறுப்பினருக்குத்தெரியுமா என்றார்.
அமைச்சர் பொன்டி எழுந்து, கோவை கலெக்டர் வீரப்பனுக்கு ஆள் அனுப்பியதுயாருடைய ஆட்சியில்? வீரப்பனின் அண்ணன் அர்ஜூனனுக்கு சிகிச்சை கொடுத்ததுயாருடைய ஆட்சியில்? ஜெயலலிதா ஆட்சியில்தான் வீரப்பனை வளர விட்டார்கள்.கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் பிடித்து வைத்திருந்தபோது, அவரைக்காப்பாற்றியது திமுக ஆட்சியில்தான் என்றார்.
அப்போது குறுக்கிட்ட செங்கோட்டையன், நக்கீரன் கோபாலை திமுக ஆட்சியில்வீரப்பனை சென்று பார்க்க அனுமதித்தது யார் என்றார்.
அப்போது சேகர்பாபு மீண்டும் பேசினார். அந்த சமயத்தில் ஆளுங்கட்சித் தரப்பில்சிலர் அதிமுக எம்.எல்.ஏக்களைப் பார்த்து ஏதோ கூறினார்.
இதைப் பார்த்த அதிமுக துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து, சேகர்பாபுபேசுகையில், எதிர்த்தரப்பினர் ரன்னிங் கமன்ட்ரி கொடுக்கிறார்கள். இப்படிச் செய்தால்எப்படி பேச முடியும் என்று சபாநாயகரிடம் கேட்டார்.
இதைத் தொடர்ந்து திமுக, அதிமுக உறுப்பினரக்ளஇடையே கடும் வாக்குவாதம்நடந்தது.
பின்னர் சேகர்பாபு தொடர்ந்து பேசினார். விடுதலைப் புலிகள் நடாட்டத்தைஒடுக்கியவர் புரட்சித் தலைவி. பாபர் மசூதி இடிப்பு தினத்தின்போது தமிழகத்திலமட்டும்தான் அமைதி நிலவியது. இங்கிருந்து போலீஸாரை பிற மாநிலங்களிலஅமைதி காக்கும் பணிக்கு அனுப்பினோம் என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குஎதிராக முதலில் குரல் கொடுத்தவர் கலைஞர் தான் என்றார்.
இப்படியாக விவாதம் தொடர்ந்து நடந்தது.












Click it and Unblock the Notifications