காதலியை மணந்தார் ராகுல் மகாஜன்
மும்பை:
தம்பியால் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக மூத்த தலைவர் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜனுக்கும்,அவரது நீண்ட நாள் காதலியான ஸ்வேதாவுக்கும் மும்பையில் நேற்று திருமணம் நடந்தது.
பிரமோத் மகாஜனின் ஒரே மகன் ராகுல் மகாஜன். இவரும் ஸ்வேதாசிங் என்ற விமான பைலட்டும் நீண்ட நாளாககாதலித்து வந்தார்கள். இவர்கள் திருமணத்திற்கு பிரமோத் மகாஜனும் சம்மதம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் துரதிர்ஷ்டவசமாக பிரமோத்தை அவரது தம்பி பிரவீண் மகாஜன் சுட்டு கொன்று விட்டார்.இந்த நிலையில ராகுல் மகாஜன்-ஸ்வேதா திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.அதன்படிநேற்று காலை திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் பாஜக தலைவர்கள், அத்வானி,கல்ராஜ்மிஸ்ரா, வெங்கையா நாயுடு, அனந்தகுமார், முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய அமைச்சர் சரத் பவார்,மகாராஷ்டிர முதல்வர்விலாஸ ராவ் தேஷ்க், னனாள்தல்வர்பரூக் அப்துல்லா, தொழிலதிபர்கள் அனில் அம்பானி,ராகுல் பஜாஜ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்தி கொண்டனர்.
பிரமோத் மகாஜன் மறைவு, ராகுல் மகாஜன் போதைப் பொருள் வழக்கில் சிக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காகதிருமணம் மிகவும் எளிமையாக நடந்து. மனைவியுடன் ராகுல் மகாஜன் வெளிநாட்டுக்கு தேனிலவு செல்கிறார்.இதற்கு மும்பை நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications