கிராமத்திற்குள் புகுந்து ரவுடிக் கும்பல் கலவரம்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே கிராமத்திற்குள் புகுந்த ரவுடிக் கும்பல் கணணில்பட்டவர்களையெல்லாம வெட்டித் தள்ளியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்நிலையத்தைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கொட்டாரம் அருகே பெரியவிளை என்ற கிராமம் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இக்கிராமத்தைச் சேர்ந்தபாலகிருஷ்ணன் என்பவர் கொட்டாரத்திற்கு நண்பர்களுடன் சென்று மது அருந்தியுள்ளார்.அப்போது நண்பர்களுக்குள் சண்டை ஏற்படட்ள்ளது. இதில், சுடலை மணி என்பவரை பாலகிருஷ்ணன், நேசமணி,கணேசன் ஆகியோர சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுடலைமணி, தன்னைத் தாக்கியவர்களைபழிக்குப் பழி வாங்க முடிவு செயதார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்குள் சுடலை மணியை வேறு ஒரு வழக்கில் போலீஸார் கைது செய்து விட்டனர்.சில நாட்களுக்கு முன்பு சுடலை மணி வெளியே வந்தார். வந்தவுடன் பாலகிருஷ்ணனை பழிதீரக்க திட்டம்தீட்டினார்.
இதைத் தொடரந்து தனது நண்பர்கள் ஆதிலிங்கம், அவரது தம்பி மோகன், ஆறுமுகம் ஆகியோரோடுபெரிவிளை கிராமத்திற்குள் புகுந்தார். கணேசன் மற்றும் பாலகிருஷ்ணனை வெட்டித்தள்ளுவதற்காக அவர்களைத்தேடினர். ஆனால் வேறு ஒரு கணேசன் அவர்கள் கையில் சிக்கினார்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அந்த கணேசனை இக்கும்பல் வெட்டித் தள்ளியது.இருளில் வெட்டியதால் அடையாளம தெரியாமல் வேறு ஒரு கணேசனை வெட்டியதை அறிந்த அக்கும்பல்அங்கிருந்து ஓடியது. வழியில் மோட்டார் சைக்கிளில் அக்கும்பல் தேடிய கணேசன் வந்தார். அவரைப் பார்த்துவண்டியை நிறுத்தி சரமாரியாக வெட்டித் தள்ளினர்.
பின்னர் பாலகிருஷ்ணன் வீட்டிற்குள் புகுந்த கும்பல் வீட்டை சூறையாடியது. வெளியில் நின்றிருந்த மோட்டார்சைக்கிளையும் தீவைத்துக் கொளுத்தியது. அப்படியும் வெறி தணியாத அக்கும்பல் சுதன் என்பவரையும்வழிமறித்து போட்டுத் தள்ளியது.ரவுடிக் கும்பல் ஊருக்குள் புகுந்து வெட்டித்தள்ளுவதை அறிந்த ஊர்மக்கள் ஒன்று திறண்டு அக்கும்பலைப் பிடிக்கமுயன்றனர்.
ஆனால் அவர்கள் தப்பி விட்டனர். இதையடுத்து கோபமடைந்த பொதுமக்கள் கன்னியாகுமரி போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் கூறியது. பொதுமக்களை சமாதானப்படுத்திய போலீஸார் சுடலை மணிமற்றும் கும்பலை தேடி வருகின்றனர்.இதில் கொடுமை என்னவென்றால், கும்பலால் வெட்டப்பட்ட கணேசனின் அண்ணன் முருகன் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ரவுடிக் கும்பலைச் சேர்ந்த ஆறுமுகம், முருகனை வழிமறித்து லிப்ட் கேட்டுள்ளார். சரிஎன்றுமுருகனும் ஆறுமுகத்திற்கு லிப்ட் கொடுத்துள்ளார். பின்னர் அவரை இறக்கி விட்டு விட்டு ஊருக்குள்வந்தபோதுதான், தனது தம்பி வெட்டப்பட்டதும், அவரை வெட்டிய ஆறுமுகத்திற்கு தான் லிப்ட் கொடுத்ததும்தெரியவந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications