தலைமை ஆசிரியர் அடித்து 40 மாணவர்கள் காயம்!
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே பெருமாத்தூர் குடிகாடு என்ற கிராமத்தில், தலைமை ஆசிரியர்அடித்ததில் 40 மாணவ, மாணவியர் காயமடைந்தனர். இதனால் ஊரே கொந்தளித்துப்போயுள்ளது.
பெருமாத்தூர் குடிகாடு என்ற ஊரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஆண்டிகுரும்பலூர் கிராமத்தைதச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்துவருகின்றனர்.இந்தப் பள்ளிக் கூடததில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதாம். மாணவ,மாணவியருக்கு சரியான முறையில் குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்துஅனைவரும் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள்,பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் குடிநீர் கூட இல்லாமல் பள்ளி நடத்துவதாஎன்று முறையிட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் தினேஷ்குமார், திங்கள் கிழமை மாலை4 மணி முதல் 6மணி வரை புகார் கூறிய 40 மாணவ, மாணவிகளை வெயிலில் நிற்கவைத்துள்ளார். பின்னர் பிரம்பால் அடித்துள்ளார். இதற்கு மதிப்பெண் சரியாகஎடுக்கவில்லை, அதனால் தான் இந்தத் தண்டனை என்றும் காரணம் கூறியுள்ளார்.
தலைமை ஆசிரியரின் வெறித்தனமான அடியால், 40 மாணவ, மாணவிகளும்காயமடைந்தனர். காயமடைந்த மாணவ, மாணவியருக்கு அரசு மருத்துவ மனையில்சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால், அந்த ஊரில் பெரும் பரபரப்புநிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications