மொபைல் பட்ரோல்: சென்னை போலீசாருக்கு100 ஹூண்டாய் கார்கள்- அதிகாரிகளே ஓட்டுவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் மேலும் 10,000 போலீசார் நியமிக்கப்படவுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் போலீஸ், தீயணைப்புத்துறை மீதான மானிய கோரிக்கைகளுக்கு பதிலளித்து கருணாநிதிபேசுகையில்,

முதல்கட்டமா இந்த ஆண்டு 5,000 புதிய போலீசார் நியமிக்கப்படவுள்ளனர். அதைத் தொடர்ந்து மேலும் 5,000புதிய போலீசார் நியமிக்கப்படுவர்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைத் தடுக்க போக்குவரத்தை சீர்படுத்தவும் கண்காணிக்கவும்20 இடங்களில் புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.8.25 கோடிஒதுக்கப்படுகிறது.

தலைமைக் காவலர், எஸ்ஐ, டிஎஸ்பி ஆகியோருக்கு பதவி உயர்வுக்கான வயது உச்ச வரப்பு முழுவதுமாகநீக்கப்படுகிறது.

ஏட்டாக இருந்தவர்கள் எஸ்.ஐ. ஆவதற்கு நடத்தப்பட்டு வந்த தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. இனி பணிமூப்பு அடிப்படையிலேயே இந்த பதவி உய்ரவுகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் இப்போது 98,897 போலீசார் உள்ளனர். இந்தத் துறையில் 5,297 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

போலீஸ்துறையை மேம்படுத்தவும் காவல்துறையினரின் குறைகளைக் களையவும் 3வது போலீஸ் கமிஷன்அமைக்கப்படுகிறது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் நியமிக்கப்படுகிறார்.

1969லும் 1989லும் போலீஸ் கமிஷன்களை அமைத்து அவர்கள் கொடுத்த பரிந்துரகளில் பெரும்பாலானவற்றைஅமல்படுத்தி காவல்துறையை நவீனமாக்கி, காவலர்களின் நலனைக் காத்தது திமுக அரசு தான்.

சென்னை காவல்துறையின் பயன்பாட்டுக்காக ஹூண்டாய் நிறுவனம் 100 அக்சண்ட் ஏசி ரக கார்களைஇலவசமாக வழங்க முன் வந்துள்ளது. இந்தக் கார்களில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்டுபோக்குவரத்து மற்றும் பிற வழக்குகளில் பயன்படுத்தப்படும்.

இந்த கார்களுக்கு ஓட்டுனர் நியமிக்கப்பட மாட்டார். வெளிநாடுகளைப் போல அதிகாரிகளே இந்த கார்களைஇயக்குவர். இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இந்த கார் கண்காணிப்புகள்விரிவாக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+