சென்னை துணை நகரம்: ராமதாஸ் போர்க் கொடி- கிராம மக்களுடன் சந்திப்பு
சென்னை:
சென்னை அருகே கிராமங்களை ஒருங்கிணைத்து துணை நகரம் அமைக்கும்விவகாரத்தில் 44 கிராம மக்களை இன்று சந்திக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ்.
செங்கல்பட்டு தாலுகாவில் காட்டாங்கொளந்தூர், திருப்போரூர் ஆகியஒன்றியங்களில் சாட்டிலைட் சிட்டியை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக முதல் கட்டமாக ரூ. 500 கோடி மதிப்பில் 1,500 ஏக்கர் நிலங்களைகையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.நிலங்களை கையகப்படுத்தவதற்காக செங்கல்பட்டு தாசில்தார் அலுவலக வருவாய்அதிகாரிகள், மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள்வரவழைக்கப்பட்டு மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் ஆகிய பகுதியில்உள்ள
அருங்கால், கன்னிவாக்கம், பாண்டூர், காயிரம்பேடு, ஊனமாஞ்சேரி, கல்வாய், களிவந்தப்பட்டு, அஸ்தினாபுரம், ஒத்திவாக்கம், குமிழி, கீரப்பாக்கம், வெளிச்சந்தை,தையூர், நல்லம்பாக்கம், முருகமங்கலம், மேலையூர், வெங்கூர், மயிலை, கடம்பூர்,மேலைக்கோட்டையூர், அகரம் காட்டூர் செங்காடு உள்பட 44 கிராமங்களில் ஆய்வுநடத்தி வருகின்றனர்.
இந்த கிரமாங்களில் வீடு வீடாக சென்று வீடுகளில் யார், யார் உள்ளனர். அரசு நிலம்எவ்வளவு உள்ளது. தனியார் நிலம் எவ்வளவு உள்ளன போன்ற பல்வேறுவிபரங்களை தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.
ஆனால், இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனையில்மக்களுக்கு ஆதரவாக பாமகவும் களமிறங்கியுள்ளனர். இத் திட்டத்தை அரசு கைவிடவேண்டும் என கிராமங்களில் வினியோகம் நோட்டீஸ் செய்து வருகின்றனர்.
இந்த கண்டன நோட்டீசில், ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கும் தமிழகஅரசுக்கு இன்று விவசாய நிலங்களை நாங்கள் விட்டுகொடுத்தால் நாளை ஒருவேலை சாப்பட்டிற்கு கூட வழி இல்லாமல் பிச்சை எடுக்க வேண்டிய அவல நிலைஏற்படும்.
நாங்கள் விவசாய நிலங்களை தெய்வமாக மதிக்கிறோம். தயவு செய்து எங்கள்நிலங்களை அரசு கைப்பற்றக்கூடாது. தேர்தல் வாக்குறுதியில் ஏழை, எளியமக்களுக்கு 2 ஏக்கர் நிலங்களை வழங்குவதாக அறிவித்த அரசு தற்போது ஏழை,எளிய மக்களின் விவசாய நிலங்களை அபகரிக்க முயல்வது தவறு.
தமிழக அரசு இந்த செயலை உடனடியாக கைவிட வேண்டும். மேலும்பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தமிழக அரசு செயல்பட்டால் மாபெரும் போராட்டம்நடத்துவோம் என்று இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கிறோம்.
இல்லை என்றால் ஒட்டு மொத்தமாக 44 ஊராட்சி மன்ற கிராமத்தை சேர்ந்தவர்கள்வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என்று மீண்டும் எச்சரிக்கிறோம் எனநோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் டாக்டர் ராமதாஸ் இன்று மாலை ஊரப்பாக்கத்தில் 44 கிராம மக்களைசந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டறிய உள்ளார். இதையடுத்துஊரப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருணாநிதிக்கு ராமதாஸ் கோரிக்கை:
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
சென்னைக்கு அருகே துணை நகரம் உருவாக்கும் திட்டத்தை, விவசாயிகளுக்குபாதகம் இல்லாத வகையில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
திருப்போரூர் அருகே இந்த திட்டத்தை நிறைவேற்றக் கூடாது. இதனால் அருமையானவிளை நிலங்கள் பாழாகி விடும். இதுகுறிதது முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கைஎடுப்பார் என நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications