நாடு முழுவதும் கேபிள் டிவி கட்டணம் குறைகிறது!
டெல்லி:
பே சானல்கள் எனப்படும் பணம் கொடுத்து பார்க்கும் தொலைக்காட்சி அலைவரிகளின் கட்டணத்தை ஒருசானலுக்கு தலா ரூ. 5 என மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அதிரடியாககுறைத்துள்ளது. இதற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிராய்எச்சரித்துள்ளது.
இதன்மூலம் வீடுகளுக்கு தரப்படும் கேபிள் டிவி இணைப்புகளின் கட்டணம் குறையவுள்ளது. ஒரு சானலுக்கு ரூ.5 என்று கணக்கிட்டு கேபிள் டிவிக்காரர்களுக்குத் தந்தால் போதும்.இந்தியாவில் கட்டண சானல்களை பார்ப்பதற்கு வசதியாக செட் டாப் பாக்ஸ்முறை அமல்படுத்தப்பட்டது.ஆனால் சென்னை நகரில் மட்டும் இந்த முறை அமல்படுத்தப்பட்டது. மற்ற நகரங்களில் மக்கள் எதிர்ப்புகாரணமாக அமல்படுத்தவில்லை.
செட் டாப் பாக்ஸ் முறை வந்த பிறகு விரும்பிய சானல்களை காசு கொடுத்து பார்க்கும் நிலை உருவானது.ஆனால் கட்டண சானல்கள் ஒவ்வொன்றும் அதிக அளவில் கட்டணம் வசூலித்து வருவதால் பொதுமக்கள கடும்பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் கட்டண சானல்களைப் பார்ப்பதை விட இலவச சானல்களே போதும்என்ற மன நிலைக்கு வந்து விட்டனர்.
இந்த நிலையில், கட்டணச்சானல்கள் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தைக் குறைக்க டிராய் நடவடிக்கையில்இறங்கியது. ஒவ்வொரு கட்டணச்சானலும், மாதத்திற்கு ரூ. 5 மட்டுமே வசூலிக்க வேண்டும். அதேபோல 30இலவச சானல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 77மட்டுமே வசூலிக்க வேண்டும் என டிராய் அதிரடியாக அறிவித்துள்ளது.
டிசம்பர் 31ம் தேதி முதல் இந்த புதிய கட்டண முறை அமலுக்கு வருகிறது. அன்று முதல் டெல்லி, கொல்கத்தா,மும்பை ஆகிய நகரங்களிலும் செட் டாப் பாக்ஸ் முறை அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
புதியகட்டண முறையைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிராய்எச்சரித்துள்ளது. ஆனால் டிராய் அமைப்பின் இந்த உத்தரவுக்கு தனியார் டிவி நிறுவனங்கள் கடும ஆட்சேபம்தெரிவித்துள்ளன.
சோனி, இ.எஸ்.பி.என், ஸ்டார்ஸ் போர்ட்ஸ் உள்ளிட்ட டிவி நிறுவனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,சானலுக்கு 5 ரூபாய் என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. இதை எதிர்த்து நீதிமன்றத்திற்குப் போகத் தயாராகிவருகிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு சானலும் வித்தியாசமான நிகழ்ச்சியைத் தருகிறது. ஆனால் எல்லாவற்றையும ஒரே மாதிரியாகபாவித்து சமமான கட்டணத்தை நிர்ணயிப்பது முட்டாள் தனமானதாகும் என்று ஈ.எஸ்.பி.என். நிறுவன நிர்வாகஇயக்குநர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications