அடுத்த ஜனாதிபதி யார்? காங்-கம்யூ மோதல்
டெல்லி:
குடியரசுத் தலைவர் தேர்தலில் கரண் சிங்கை நிறுத்த காங்கிரஸும், ஜோதிபாசுவைநிறுத்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்திருப்பதால் இரு கட்சிகளுக்கும்இடையே மோதல் ஆரம்பமாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலைமாதத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் ஒரு முறை கலாமை குடியரசுத்தலைவராக்கும் எண்ணம் காங்கிரஸ் கூட்டணி அரசிடம் இல்லை என்றுகூறப்படுகிறது. மேலும் மீண்டும் ஜனாதிபதியாக கலாமும் விருப்பம் காட்டவில்லை.அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் பேராசிரியர் பணிக்குத் திரும்ப அவர் முடிவுசெய்துள்ளார்.எனவே புதிய வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வழக்கமாகதுணை குடியரசுத் தலைவராக இருப்பவர்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளராகநிறுத்தப்படுவர். சில நேரங்களில் இதில் விதி விலக்காக வேறு யாராவதுநிறுத்தப்படுவர்.
தற்போது துணை குடியரசுத் தலைவராக இருக்கும் பைரான் சிங் ஷெகாவத்,பாஜகவைச் சேர்ந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக முதல்வராக இருந்தவர்.இப்போது அவர் நடுநிலையுடன் செயல்பட்டு வந்தாலும் அவரை ஜனாதிபதியாக்ககாங்கிரஸ் விரும்பவில்லை.
தனது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான டாக்டர் கரண் சிங்கை குடியரசுத் தலைவர்வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காஷ்மீரின் ராஜாவாக இருந்த கரண்சிங்கின் தந்தை தான் அந்த மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இப்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ள கரண் சிங் பழுத்த காங்கிரஸ்வாதி. கடந்ததுணை ஜனாதிபதி தேர்தலின்போதே அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால்,காங்கிரசின் அந்த முயற்சிக்கு பாஜக ஆதரவு தரவில்லை. இதனால் பைரோன் சிங்ஷெகாவது துணை ஜனாதிபதியானார்.
இந்த முறை கரண் சிங்கை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில்மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான ஜோதிபாசுவை அந்தப் பதவிக்கு நிறுத்த கம்யூனிஸ்ட்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கடந்த காலத்தில் மூன்றாவது அணியின் சார்பில் பிரதமர் பதவியே ஜோதிபாசுவைதேடி வந்தது. ஆனால், அதை அப்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் நிராகரித்துவிட்டன.அதை கம்யூனிஸ்ட்கள் செய்த வரலாற்றுத் தவறு என்று ஜோதிபாசு பின்னர்வர்ணித்தார்.
இப்போது நாடாளுமன்ற சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தசோம்நாத் சாட்டர்ஜி உள்ளார். அதே போல ஜனாதிபதி பதவிக்கும் தங்களது மூத்ததலைவர் ஜோதிபாசுவை நிறுத்த கம்யூனிஸ்ட்டுகள் முடிவு செய்துள்ளன.
கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் இதனால் சிக்கலில்மாட்டியுள்ளது.
கரண் சிங்கை பொது வேட்பாளராக நிறுத்த கம்யூனிஸ்ட் மற்றும் பாஜகவுடன்விவாதம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications