சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்:தீவிர பாதுகாப்பு-10,000 போலீசார் குவிப்பு
சென்னை:
இன்றும், நாளையும் சென்னையில் நடக்கவுள்ள விநாயகர் சிலை ஊர்வலங்களையொட்டி நகரில் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைகள் கடலில் கரைக்கப்படும் இந்த நிகழ்ச்சிக்காக 10,000 போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. சென்னை இந்துமுன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 5,000க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டுவருகின்றன.ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் தலா 2 போலீசார் வீதம் 24 மணி நேர பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.2 மற்றும் 3ம் தேதிகளில் இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில்கரைக்கப்படுகின்றன.
ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது குறித்து இந்து அமைப்புகளுடன் போலீஸ் கமிஷ்னர் லத்திகா சரண்உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். போலீஸ் விதித்துள்ள 45 விதிமுறைகளை பின்பற்றிஅமைதியாக ஊர்வலங்களை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று சிவசேனா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலங்கல் 3 இடங்களில் நடைபெறுகிறது. இந்து முன்னணிஉள்ளிட்ட மற்ற இந்து அமைப்புகள் சார்பில் நாளை ஊர்வலங்கள் நடக்கின்றன.
ஊர்வலங்களை அமைதியாக நடத்த சென்னை நகரில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதுதவிர பதட்டமான பகுதிகள் என்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் ஆயுதப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்து முன்னணியின் அமைப்பாளர் மகேந்திரன் கூறுகையில்,
இந்து முன்னணி சார்பில் 5001 விநாயகர் சிலைகள் பூஜை செய்யப்பட்டு வருகின்றன. 3ம் தேதி இந்த சிலைகள்ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். வடசென்னை மற்றும் மத்திய சென்னையில் உள்ளசிலைகள் முத்துசாமி பாலத்தில் இருந்து ஊர்வலமாக புறப்படும். இந்த ஊர்வலத்தை பாஜக மாநில பொதுச்செயலாளர் மோகன்ராஜ் தொடங்கி வைக்கிறார்.
தென் சென்னை மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வள்ளூவர் கோட்டத்தில் இருந்துஊர்வலமாக புற்படும். இதை பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைக்கிறார். திருவல்லிக்கேணியில்இருந்து தொடங்கும் ஊற்வலத்தை இந்து முன்னணித் தலைவர் ராம.கோபலன் தொடங்கி வைக்கிறார். இதில்பாஜக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன், பண்டாரு தத்தாத் ரோயா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை புறநகர் பகுதியில் ஊர்வலம் மேடவாக்கத்தில் இருந்து தொடங்கும். அதை பாஜக மூத்த தலைவர்இல.கணேசன் தொடங்கி வைக்கிறார்.
இந்த ஊர்வலங்கள் கடற்கரையை சென்றடைந்ததும் மாலை 4.20 மணிக்கு சிலைகள் கடலில் கரைக்கப்படும்என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications