சட்டசபையில் அதிக நேரம் பேசிய ஜெ.: சபாநாயகர்
சென்னை:
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு அதிக நேரம் பேசவாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு புள்ளிவிவரங்களை சபாநாயகர் ஆவுடையப்பன் சபையில் தெரிவித்தார்.ஆவுடையப்பன் பேசுகையில் தெரிவித்ததாவது:
13வது சட்டசபைக் கூட்டத் தொடர் 17.5.2006 அன்று தொடங்கி 31ம் தேதி வரை 9 நாட்களும், 2வது தொடர்22.7.2006 அன்று தொடங்கி 2.9.2006 வரை 31 நாட்களும் நடைபெற்றது. மொத்தம் 40 நாட்கள் கூட்டத் தொடர்நடந்துள்ளது.
அவை நடைபெற்ற மொத்த நேரம் 164 மணி 34 நிமிடம். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது 4 நாட்கள், 11 மணி 56 நிமிடங்களுக்கு விவாதம் நடந்தது. இதில் பேசியவர்கள் 26பேர். ஆளுங்கட்சியைச்சேர்ந்தவர்கள் 5 பேர் பேசிய நேரம் 2 மணி 10 நிமிடம். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 21 பேர் பேசிய நேரம் 9மணி46 நிமிடம்.முதல்வர் கருணாநிதியின் பதிலுரை 1 மணி 4 நிமிடம்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா 27.5.2006 அன்று விவாதத்தில் கலந்து கொண்டு மொத்தம் 33 நிமிடம்பேசினார். இதில் 9 நிமிடம் குறுக்கீடுகள் இருந்தது.
நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த பொது நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு 6நாட்கள், 53 பேர் 22 மணி 23 நிமிடங்கள் பேசினர். எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, வரவு செலவு திட்டவிவாதத்தில் கலந்து கொண்டு 31.7.2006 அன்று 2 மணி 7 நிமிடம் பேசினார். இதில் குறுக்கீடுகள் 33 நிமிடம்.இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகமான நேரம் பேச அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது.
உரிமை மீறல் குறித்து எழுப்பப்பட்ட பிரச்சினைகள் 11, உரிமை மீறலுக்கு அனுப்பப்பட்டவை 6,நிராகரிக்கப்பட்டவை 6. பார்வையாளர்கள் மாடங்களில் அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை27,969 பேர் என்றார் ஆவுடையப்பன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications