தாயார் உள்பட 4 பேர் கொலை: கேரள இளைஞரின் வெறிச்செயல்!
இடுக்கி:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தாயார், தாத்தா உள்ளிட்ட4 பேரை வெறித்தனமாக கொன்ற இளைஞரைபொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இடுக்கி மாவட்டம் கொன்னத்தாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோஜோ என்ற ஜோமோன். இவர் சனிக்கிழமைகாலை தனது தாயார் மேரி, தாயாரின் தந்தை ஜோசப் ஆகியோரை வீட்டுக்குள் ஒரு அறையில் வைத்துப்பூட்டினார். பின்னர் கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்தார்.இதில் பயங்கர சப்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இதில் மேரியும், ஜோசப்பும் இறந்தனர். இந்த சம்பவத்தில்ஜோஜோவுக்கு காயம் ஏற்ப்பட்டது. இதையடுத்து பக்கதில் வசித்து வந்த தாமோதரன் என்பவரின் வீட்டுககுச்சென்ற ஜோஜோ, வீட்டில் விபத்து ஏற்பட்டு விட்டதாகவும், ஆஸ்பத்திரிக்குப் போக டாக்ஸி பிடித்து வருமாறும்கோரினார்.
இதையடுத்து தாமோதரனின் மகன் விஜயன் டாக்ஸி பிடிக்க விரைந்தார். இந்த சமயத்தில் ஜோஜோவின்செயலால் சந்தேகமடைந்த தாமோதரனும் அக்கம் பக்கத்தினரும் ஜோஜோவை பிடிக்க முயன்றனர்.
இதையடுத்து தனது கையில் வைத்திருந்த கத்தியால் தாமோதரன், அவரது மருமகள் சாந்தா ஆகியோரைஜோஜோ வெறித்தனமாக குத்தினார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும்மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதில் வழியிலேயே சாந்தா உயிரிழந்தார். தாமோதரன் மருத்துவமனையில் இறந்தார். அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டு ஜோஜோவை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் போலீஸார் வந்துஅவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications