காங் மாநாடு: புறக்கணிப்பு-வாசன் உள் குத்து
மதுரை:
மதுரையில் நடந்த இளைஞர் காங்கிரஸ் மாநில மாநாட்டை அக் கட்சியின் தமிழக தலைவர் கிருஷ்ணசாமி,மத்திய அமைச்சர் இளங்கோவன் ஆகியோர் புறக்கணித்துவிட்டனர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் நீக்கப்பட்டு அவருக்குப்பதிலாக வாசனின் ஆதரவாளரான மயூரா ஜெயக்குமார் தலைவராக்கப்பட்டார். அது முதலே மாநில காங்கிரஸ்தலைமைக்கும் இளைஞர் காங்கிரசுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.மேலும் மயூரா ஜெயக்குமாரை பிற காங்கிரஸ் கோஷ்டிகளும் எதிர்த்து வருகின்றன.
இந் நிலையில் மதுரையில் நடந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டை முக்கிய தலைவர்கள் அனைவருமேபுறக்கணித்தனர். இக் கூட்டத்தில் 34 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், வாசனின் ஆதரவாளர்களாக 12 எம்எல்ஏக்கள் மட்டும் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டை கிருஷ்ணசாமி, இளங்கோவன், எம்.பி.,க்கள் தங்கபாலு, பிரபு, ஹாரூண் ஆகியோரும்முன்னாள் எம்.பி. ஜெயந்தி நடராஜனும் புறக்கணித்துவிட்டனர்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வாசன் பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு அடித்தளம் அமைக்கும்வகையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லையே என்ற குற்ற உணர்வு இல்லாமல்சென்னைக்கு திரும்பி செல்வேன் என்று பிற கோஷ்டியினரை போட்டுத் தாக்கினார்.
இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவிதொகை வழங்கும் தமிழக அரசு அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க முயற்சி எடுக்க வேண்டும்,
தொழில் முதலீடுகள் தமிழகத்தை நோக்கி வர முயற்சிக்க வேண்டும், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சிநாளாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டையொட்டி மதுரை நகர் முழுவதும் காங்கிரசார் ஏக கலாட்டாக்கள் செய்தனர். ரோடுகளை மறைத்துகட்-அவுட்கள், வரவேற்பு வளைவுகள், தண்ணி போட்டுவிட்டு அலம்பல் செய்வது, நடு ரோட்டில் வாகனங்களைஆங்காங்கே நிறுத்தி வைத்துக் கொண்டு இட்லி வாங்கி ஆற, அமர தின்றிவிட்டு சவுண்டு விட்டவாறு போவதுஎன திராவிடக் கட்சிகளின் அலப்பறைகளுக்கு இணையாக காங்கிரசாரும் ஆட்டம் போட்டனர்.












Click it and Unblock the Notifications