ஜெ. கையெழுத்து போடாத பைல்கள் 1,112
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் 1,112 கோப்புகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகையெழுத்தே போடாமல் திருப்பி அனுப்பினார் என்று முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அதிமுகஆட்சியில் 6 மாதம், ஒரு ஆண்டு, 2 ஆண்டு என காலதாமதப்படுத்தி கோப்புகள்அனுப்பப்பட்டுள்ளன.சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உரிய இடம், தேவையின் பொருட்டு மாநில அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு மாற்றப்பட்டது. அந்த இடம்உயர்நீதிமன்றத்திற்கு தேவைப்பட்டதால், அந்த இடத்தை மீண்டும்உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான கோப்பு அது.
முதலில் இதுதொடர்பான கோரிக்கையை 2003 பிப்ரவரி 2ம் தேதி உயர்நீதிமன்றம்அனுப்புகிறது. கோப்பு தயாராகி, பல்வேறு துறைகள் சென்று இறுதியில் 2004ம்ஆண்டு ஜனவரி 12ம் தேதி முதல்வர் அலுவலகம் செல்கிறது.
கோப்பு அங்கேயே தங்குகிறது. அதன்பிறகு அது தொடர்பாக முதல்வர்அலுலகவத்திற்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளது. ஓராண்டு காலம் முதல்வர்அலுலகத்தில் இருந்த அக்கோப்பு திருப்பி அனுப்பப்படுகிறது.
2005ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி மீண்டும் அந்த கோப்பு முதல்வர் அலுலகத்திற்குஅனுப்பப்படுகிறது. 2006 ஜனவரி 7ம் தேதி முதல்வரின் செயலாளர் மீண்டும்அக்கோப்பினை உள்துறைச் செயலாளருக்கு கேள்வி கேட்டு அனுப்புகிறார். பின்னர்கோப்பு மீண்டும் அனுப்பப்படவே இல்லை.
திமுக ஆட்சி அமைந்த பிறகுதான் அக்கோப்பில் ஜூலை 10ம் தேதி நான்கையெழுத்திட்டேன்.
இப்படி பல முக்கிய கோப்புகள் கையெழுத்திடப்படாமல் இருந்திருக்கின்றன.ஒன்றல்ல, இரண்டல்ல 1,112 கோப்புகள் கடந்த ஆட்சியில் கையெழுத்திடப்படாமல்இருந்துள்ளன என்று கூறியுள்ளார் கருணாநிதி.
ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கிறேன் என்று ஆட்சியில் இருந்தபோதுஜெயலலிதா அடிக்கடி சொல்லி வந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
