இளைஞர்களே.. சென்னையில் கலாம் அழைப்பு
சென்னை:
இந்தியாவை அறிவு சார் சமுதாயமாக மாற்ற வேண்டிய கட்டம் வந்துவிட்டது என ஜனாதிபதி அப்துல் கலாம்கூறினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு விழா இன்று நடந்தது. இதில் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டுபுதுப்பிக்கட்ட செனட் கட்டடத்தை திறந்து வைத்தார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, தமிழக முதல்வர் கருணாநிதி, மத்தியஅமைச்சர்கள் அர்ஜுன் சிங், தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலாம் பேசுகையில்,இந்த விழாவில் கலந்து கொள்வது ஒரு இனிய வாய்ப்பு, இந்த நேரத்தில் என் கல்லூரி நாட்கள் நினைவுக்குவருகின்றன. சென்னை பல்கலைக்கழத்துடன் இணைந்த புனித ஜோசப் கல்லூரியில் படித்தபோது எனக்கு மிகச்சிறந்த ஆசிரியர்கள் கிடைத்தார்கள்.
நல்ல ஆசிரியர்களால் தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்,பள்ளிகளில் நீதி போதனை பாடமும் இடம் பெற வேண்டும். வாரம் ஒரு முறையாவது இந்தப் பாடம் புகட்டப்படவேண்டும்.
சென்னை பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் கல்வி போதனையில் மிகுந்த அனுபவம் வாய்ந்த நிறுவனம். இந்தஅனுபவத்தை வைத்து இந்தியாவில் இணைய பல்கலைக் கழக முறையை ஏற்படுத்த சென்னை பலகலைக்கழகம்முன்னோடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதை அமல்படுத்த வேண்டுமானால், தமிழகததில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் இந்தத் திட்டத்தில்இணைய வேண்டும். அதற்கு மாநில அரசு மிக முக்கிய பங்காற்ற வேண்டும்.
புதிய முயற்சிகளையும், திறமையான திட்டங்களையும பல்கலைக்கழகங்கள் நிறைவேற்ற வேண்டுமானால்,பல்கலைக்கழகங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
நாட்டை அறிவு சார் சமுதாயமாக மாற்ற வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். உயர்கல்வி மூலம் அறிவு சார்சமுதாயத்தை உருவாக்கத் தேவையான மனித ஆற்றலை உருவாக்கும் வகையிலான கல்வி முறை உருவாக்கப்படவேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியாவை பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக மாற்ற வேண்டியஅவசியம் இருப்பதால் இந்த மாற்றங்கள் மிக அவசியமானவை.
சமூக சீர்திருத்தத்தில் 150 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க சென்னை பல்கலைக்கழகததின் பங்கு மிகவும்முக்கியமானது. மாணவர்களுககு ஒருங்கிணைந்த கல்வியை கொடுப்பதன் மூலம் சமுதாயத்தில் அவர்களைசிறந்த குடிமக்களாக மாற்றும் பெரும் பணியும் சென்னை பல்கலைக்கழகத்திடம் உள்ளது. அதற்கான தகுதியும்சென்னை பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
21ம் நூற்றாண்டின் சவால்களை சந்திக்கும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தின் முயற்சிகளுக்கு மாநில அரசுவினையூக்கியாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மனித ஆற்றல் உருவாக்கும்பணிகளுக்கு தமிழக அரசின் உதவி மிக அவசியம்.
நம் நாட்டில் 20 கோடி ஏழை மக்கள் உள்ளனர். இவர்களை வறுமைக் கோட்டுக்கு மேலே கொண்டு வரவேண்டியமிகப் பெரும் பணி நம் முன் உள்ளது. அவர்களுககுத் தேவையான உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி,வேலை வாய்ப்பு, நல்ல வாழ்க்கை ஆகியவற்றை அமைத்துத் தர வேண்டும்.
நமது நாட்டின் வளர்ச்சி ஆண்டுக்கு எட்டு சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது 10 சதவீத அளவுக்கு இருக்கவேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். அப்போதுதான் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தைஉயர்தத முடியும என்று கூறுகிறார்கள்.
விவசாயம், உணவு பதப்படுத்துததல், கல்வி, சுகாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு ஆகிய ஐந்து முக்கியத்துறைகளில் நாம் சுயசார்பு அடைய வேண்டும். அதேபோல மின்சாரம், தரை மற்றும் விமானப் போக்குவரத்து,தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் நாம் சுய சார்பு அடைய வேண்டும். அப்போதுதான் நாம் வளர்ந்தநாடாக மாற முடியும்.
இநிதியாவில் தற்போது உள்ள 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களைக் கொண்டு 2050ம் ஆண்டுக்குள் நமது நாடுமிகப்பெரிய வளர்ச்சியை எட்டமுடியும் என்றார் கலாம்.
இதையடுத்து பல்கலைக்கழக மாணவர்களுடன் கலாம் கலந்துரையாடினார். ஆங்கிலதிலும் தமிழிலும் அவர் பதில் தந்தபோதுமாணவர்கள் கைதட்டி மகிழ்ந்தனர். பின்னர், நமது நாடு உயர உறுதிமொழியை சொல்லி அதை திரும்பக் கூறச்செய்தார் கலாம்.
-இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சூலூர் கிராமத்தில் உள்ளஇஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற கலாம், சென்னைதிரும்பி இந்தியன் வங்கியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தமிழ்நாடு மீடியேஷன் மற்றும் கன்சலேஷன்மையத்தின் முதலாவது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்துகலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதிக்குதொல்காப்பியர் விருதை வழங்குகிறார் கலாம்.
இதையடுத்து தரமணியில் உள்ள தேசிய விவசாய பவுண்டேஷன் ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு மையத்தினை பார்வையிட்டு விவசாயிகளுடன் உரையாடி பின் இரவு9.30 மணிக்கு டெல்லி திரும்புகிறார்.
செல்போன், பைகளுக்கு தடை:
கலாம் வருகையையொட்டி சென்னையில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஜனாதிபதி பங்கேற்கும் விழாக்களுக்கு வருவோர் மொபைல் போன்கள்மற்றும் கைப் பைகளை கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்ட கல்லூரி மாணவர்கள் சிறை வைப்பு:
இதற்கிடையே சென்னையில் தங்கி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வரும் சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள், ஜனாதிபதி அப்துல் கலாமைசந்திக்க முயன்றனர். இதனால் அவர்களை திருவள்ளூரில் ஒரு கிராமத்தில் போலீஸார் சிறை வைத்தனர்.
சேலம் தனியார் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த பல நாட்களாக சென்னையில் தங்கி பல்வேறு வகையில் போராட்டம் நடத்திவருகின்றனர். நிர்வாகம் அதிக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து இப்போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என அறிவித்து சென்னை அருகே காரனோயிைல் ஆத்தூர் என்ற கிராமத்தில் தங்கியுள்ளனர்.இன்று சென்னையில் அப்துல் கலாமை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டிருந்தனர்.
இதையடுத்து சுமார் 300 போலீஸார் ஆத்தூர் கிராமத்திற்கு விரைந்தனர். மாணவர்கள் யாரும் கிரமத்தை விட்டு வெளியேறி விடாமல் தடுக்கும்பொருட்டு அவர்கள் தங்கியிருந்த வீடுகளை சுற்றி காவலுக்கு நின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications