ராஜினா செய்தார் சில்மிஷ அமைச்சர் ஜோசப்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம் :

விமானத்தில் முன்னாள் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் கேரளபொதுப்பணித்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் இன்று தனது பதவியை ராஜினாமாசெய்தார்.

பி.ஜே.ஜோசப், விமானத்தில் முன்னாள் பெண் டிவி செய்தி வாசிப்பாளரும்நடிகையுமான லட்சுமியிடம் முறைகேடாக நடந்துள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளதாகஇது குறித்து விசாரணை நடத்திய அம் மாநில பெண் ஐ.ஜி. சந்தியா கேரள அரசிடம்தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ஜோசப்பை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் அச்சுதானந்தன் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்தார்ஜோசப்.

சென்னையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி கொச்சிக்கு சென்ற கிங்பிஷர்விமானத்தில் பயணம் செய்த லட்சுமி கோபகுமாரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்அமைச்சர் ஜோசப்.

இதுகுறித்து கேரள மாநில ஆயுதப் படை ஐ.ஜி. சந்தியா விசாரணை நடத்தி முதல்வர்அச்சுதானந்தனிடம் நேற்று அறிக்கை சமர்ப்பித்தார்.

அதில், ஜோசப் மீதான புகாருக்கு அடிப்படை ஆதாரம் இல்லாமல் இல்லை என்றுகுறிப்பிட்டுள்ளார். ஜோசப் மீதான புகாரை நிராகரித்து விட முடியாது. இந்த புகார்குறிதது விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

புகார் கொடுத்துள்ள லட்சுமியின் வாக்குமூலத்தின் அடிடிப்படையிலும், விமானத்தில்பயணம் செய்த பிற பயணிகள், விமான ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்டவிசாரணையிலும் லட்சிமியை அமைச்சர் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் புகாரில்பொய் இல்லை என்று தெரிகிறது.

அமைச்சர் சில்மிஷம் செய்ததை (பின் இருக்கையில் இருந்து கையை விட்டுலட்சுமியை நோண்டியது, கட்டிப் பிடிக்க முயன்றது) யாரும் பார்க்கவில்லைஎன்றாலும் அவரது தொந்தரவை தாங்க முடியாமல் லட்சுமி நெளிந்ததையும் அவர்இடம் மாறி அமர்ந்ததையும் சக பயணிகள் சிலரும், விமான ஊழியர்களும் நேரில்பார்த்துள்ளனர் என்று தனது அறிக்கையில், சந்தியா தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை உள்துறை செயலாளர் லிஸ்ஸி ஜேக்கப்பிடம் சந்தியா கொடுத்தார்.இந்த அறிக்கையை உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் இன்றுமுதல்வர்அச்சுதானந்தனிடம் வழங்கினார். இதையடுத்து ஜோசப்பை முதல்வர் பதவி விலகச்செய்தார்.

ஆளும் இடதுசாரிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கேரள காங்கிரஸ் (ஜோசப் பிரிவு)கட்சியின் தலைவராக உள்ளார் அமைச்சர் ஜோசப். இவரையும் சேர்த்து அந்தக்கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளில் செக்ஸ் புகார் காரணமாக பதவி இழக்கும் 3வது கேரளஅமைச்சர் ஜோசப் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+