மசூதி வழியாக ஊர்வலம்-ராம.கோபாலன் கைது
சென்னை:
சென்னையில் வினாயகர் சிலை ஊர்வலத்தின்போது மசூதி வழியாக செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர்ராம.கோபாலன் கைது செய்யப்பட்டார்.
கடந்த இரு தினங்களாக வினாயகர் சிலை ஊர்வலங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு அமைதியாக நடந்துமுடிந்தன. மாலையோடு ஊர்வலங்கள் முடிவடைந்த நிலையில் நேற்றிரவு திடீரென ஏராளமானதொண்டர்களோடு ராம.கோபாலன் திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவிலிருந்து ஊர்வலமாகப்புறப்பட்டார்.அதில் 4 வினாயர் சிலைகளும் எடுத்துச் செல்லப்பட்டன. சிறிய பிள்ளையார் சிலையை ராம.கோபாலன் தூக்கிவந்தார்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தன. ரத்னா கபே ஹோட்டல் அருகே ஊர்வலத்தை போலீசார் தடுத்தனர்.ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை இதனால் கலைந்து போக வேண்டும் என எச்சரித்தனர்.
ஆனால்ஸ போலீசாரை மீறி ஐஸ் ஹவுஸ் பள்ளிவாசல் வழியாக ஊர்வலம் செல்ல முயன்றனர். இதையடுத்துபோலீசார் வழியை மறித்து அரண் போல நின்றனர். உடனே கலைந்து போகாவிட்டால் கடும் நடவடிக்கைஎடுப்போம் என எச்சரித்தனர்.
இதையடுத்து அந்த இடத்திலேயே சிறிது நேரம் கோஷமிட்ட இந்து முன்னணி அமைப்பினர் நடு ரோட்டில்பிள்ளையார் சிலைகளுக்கு சூடம் ஏற்றி பூஜை செய்தனர்.
இதைத் தொடர்ந்து ராம.கோபாலன் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைக்கப்பட்ட அவர்கள் இரவிலேயே விடுவிக்க்பபட்டனர்.
கைதாகும்போது ராம.கோபாலன் நிருபர்களிடம் கூறுகையில், மசூதி வழியாக ஊர்வலம் செல்ல எங்களுக்கு முழுஉரிமை உண்டு. அந்த உரிமை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
முன்னதாக மாலையில் வினாயகர் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்து அவர் பேசுகையில்,
கோவில நிலத்தை எடுத்து நிலமற்ற ஏழைகளுக்குத் தர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. கோவில் நிலத்தை தந்தவள்ளல் என்று பெயர் வாங்கி தேர்தலில் ஜெயிக்க நினைக்கிறார்கள். இதன் மூலம் கோவிலையும் தெய்வத்தையும்அழிக்க நினைக்கிறார்கள்.
கோவில் நிலம் எடுக்கப்பட்டால் அப் பகுதி மக்கள் போராட்டம் நடத்த வேண்டும். ஏற்கனவே ஆயிரக்கணக்கானகோவில் நிலத்தை ஏப்பம் விட்டுவிட்டார்கள். இனியும் மிச்சமிருக்கும் நிலத்தையும் அரசு எடுத்துக் கொள்ளஅனுமதிக்க முடியாது.
ஆலய நிலம் காப்போம்.. ஆலயம் காப்போம் என்றார்.
இந் நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய செயலாளர் பண்டாரு தத்தாத்ரேயா,
கோவில் நிலத்தை எடுக்க தமிழக அரசை அனுமதிக்க மாட்டோம். வக்பு வாரிய நிலத்தை எடுத்தால் பதவியில்இருக்க முடியுமா? கிருஸ்தவ நிலத்தை எடுக்க முடியுமா? எடுத்தால் அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா?அதே நேரத்தில் கோவில் நிலத்தை எடுத்தால் மட்டும் அரசியல்வாதிகள் அமைதி காக்கிறார்கள். நம் சமுதாயத்தில்ஒற்றுமை தேவை என்றார்.
இந் நிலையில் வினாயகர் சிலை ஊர்வலங்களை எந்த சிறு அசம்பாவித சம்பவமும் இன்றி நடத்த உதவியபோலீசாருக்கும் அமைப்பாளர்களுக்கும் சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் லத்திகா சரண் நன்றிதெரிவித்துள்ளார்.
கடந்த 2 தினங்களாக 11 பாதைகள் வழியாக மொத்தம் 1306 பெரிய சிலைகள் உள்ளிட்ட வினாயகர் சிலைகள்ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான பாதுகாப்புப் பணியில் 10,000 போலீசார் இரு நாட்களாக இரவு பகலாக ஈடுபட்டிருந்தனர். மேலும்உளவுப் பிரிவினரும் முழு நேர உஷார் நிலையில் இருந்தபடி நிலைமையை கண்காணித்தபடி இருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications