ஒரே விமானத்தில் ஜெ, சசி- வைகோ பயணம்
சென்னை:
சென்னையிலிருந்து மதுரைக்கு சென்ற தனியார் விமானத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, உடன் பிறவா சகோதரி சசிகலா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பயணம் செய்தனர்.
ஆண்டிப்பட்டியில் இன்று மாலை நடைபெறும் வாக்காளர்களுக்கு நன்றிதெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா முற்பகல் 11.45மணிக்கு சென்னையிலிருந்து மதுரை செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில்செல்ல திட்டமிட்டிருந்தார்.ஆனால், கடைசி நிேரத்தில் அதை ரத்து செய்து விட்டு தனியார் விமானமானபாரமெளண்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் சென்றனர்.
வைகோவும் இன்று மதுரைக்கு தனது மனைவியுடன் சென்றார். ஜெயலலிதாபாரமெளண்ட் விமானத்தில் செல்வதை அறிந்த வைகோ அதே விமானத்தில் பயணம்செய்தார். மதுரை சென்ற வைகோ அங்கு ஜெயலலிதாவிடம் விடைபெற்றுக்கொண்டு சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குச் சென்றார்.
5 பெண் செயற்குழு உறுப்பினர்களுக்கு கல்தா:
இதற்கிடையே அதிமுகவைச் சேர்ந்த 5 பெண் செயற்குழு உறுப்பினர்களை அந்தப் பொறுப்பிலிருந்து ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
ஆட்சியில் இருந்தால் அமைச்சர்களை நீக்குவது, ஆட்சியில் இல்லாவிட்டால் கட்சி நிர்வாகிகளை மாற்றுவது ஜெயலலிதாவுக்கு வழக்கம். அந்தவகையில் சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பின் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மாற்றப்பட்டுவிட்டனர்.
இப்போது மீண்டும் ஒரு மாற்றம். இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
தூத்துக்குடிமாவட்டம் ராஜம்மாள் சாமர்ஜர், ஈரோடு தெற்கு மாவட்டம் செல்விமுருகேசன், திருவள்ளூர் கஸ்தூரி, திருப்பூர் சாந்தி, பர்கூர் சந்திரா,புதுச்சேரி சுசீலா, நாமக்கல் மாவட்டம் பொன்மணி ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கபபடுகிறார்கள்.
அவர்களுக்குப் பதில், தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி, நாகை மாவட்ட செயலாளர் பானுமதி, திண்டுக்கல் மாவடட்செயலாளர் பா.வளர்மதி, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் குமுதா பெருமாள், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குருத்தாய் என்ற விண்ணரசி ஆகியோர்நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
வரும் 12ம் தேதி அதிமுக செயற்குழுக் கூடவுள்ள நிலையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்டிப்பட்டி பயணம்:
விமானம் மூலம் மதுரை சென்ற ஜெயலலிதா அங்கு சங்கம் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்த பின் மாலையில் கார் மூலம் ஆண்டிப்பட்டி கிளம்பினார்.ஜெயலலிதாவுக்கு வழியெங்கும் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அதிமுகவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
தேர்தல் தோல்விக்குப் பின் முதல் முறையாக ஆண்டிப்பட்டிக்கு ஜெயலலிதா வருவதால் அங்கு பெரும் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆண்டிப்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார்.
இரவு மதுரை திரும்பும் ஜெயலலிதா அங்கு தங்கிவிட்டு நாளை காலை விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி மதுரை விமான நிலைய வாசலில் இருந்து ஆண்டிப்பட்டி வரும் எங்கு நோக்கினும்அதிமுக கொடிகள், தோரணங்கள், வரவேற்பு வளைவுகள், போஸ்டர்களாக காணப்படுகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications