நிலம்- அன்பழகன் மீது திமுக தொண்டர் வழக்கு

Subscribe to Oneindia Tamil

கரூர்:

திமுக அலுவலகம் அமைப்பதற்காக தனியார் நிலத்தை ஆக்கிரமித்ததாகநிதியமைச்சர் அன்பழகன் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கரூர் மாரியம்மன கோவிலின் பரம்பரை அறங்காவலராக இருப்பவர்முத்துக்குமார்.இவரது தந்தை குழந்தைவேல் பிள்ளை. இவருக்கு நீலிமேடு என்ற இடத்தில் 26சென்ட் நிலம் உள்ளது. இதில் 5 சென்ட் நிலத்தை வீரப்ப முதலியார் என்பவருக்குவாடகைக்கு விட்டார்.

மீதம் உள்ள 21 சென்ட் நிலத்தை 1971ம் ஆண்டு அறிஞர் அண்ணா பூங்காஅமைப்பதற்காகவும், கரூர் மாவட்ட திமுக அலுவலகம் அமைக்கவும் அளித்தார்.இதற்காக திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி பெயரில் 99 ஆண்டுகுத்தகைக்கு கொடுத்தார்.

இந் நிலையில் கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி அறங்காவலர்முத்துகுமார், 26 சென்ட்நிலத்தையும், திமுக மாவட்ட அலுவலகம் கட்ட கட்சியின் பொதுச் செயலாளரானஅமைச்சர் அன்பழகன்னுக்கு தானமாக எழுதிக் கொடுத்து விட்டார்.

இதைத் தொடர்ந்து கரூர் எம்.பி. கே.சி.பழனிச்சாமியும், மாவட்டச் செயலாளர் வாசுகிமுருகேசனும் இடத்தை பார்வையிட்டனர். அப்போது 5 சென்ட் நிலத்தைவைத்திருந்த வீரப்ப முதலியார் மகனும், வட்ட திமுக செயலாளருமான குமார்மற்றும் அவரது சகோதரி ஆகியோர் நீண்டகாலமாக அந்த இடத்தில் வசித்து வந்ததுதெரியவந்தது.

இதையடுத்து அவர்களை அங்கிருந்து காலி செய்யுமாறு வாசுகி முருகேசன்கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த குமார் இதுதொடர்பாக கரூர்மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் வரும் 20ம் தேதி அமைச்சர் அன்பழகன்,கே.சி.பழனிச்சாமி எம்.பி. ஆகியோர்நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறுஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+