குண்டு வைத்து கல்யாணத்தை நிறுத்திய காதலர்
பெங்களூர்:
தான் விரும்பிய பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயமானதால் ஆத்திரமடைந்த வாலிபர்,மணமகன் வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்க்க முயன்றபோது பிடிபட்டார்.
பெங்களூர் காடுகோடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடரமணப்பா. இவரது மகன்ரமேஷ். இவருக்கு நேற்றுமுன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.திருமணத்திற்கான ஏற்பாடுகளை முடித்து விட்டு மணமகன் வீட்டார், தங்களதுவீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவி வீட்டுக்கு வெளியே நாய்குரைத்துள்ளது.
இதையடுத்து வெங்கட ரமணப்பா வெளியில் வந்து பார்த்தார். அப்போது அங்குஇரண்டு பேர் வீட்டு வளாகத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்து திடுக்கிட்டார்.
உடனடியாக சப்தம் போட்டபடி அவர்களை நோக்கி ஓடினார். அதற்குள் அந்தஇரண்டு பேரும் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல்தரப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் வெடிகுண்டுகளை கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர். இந்த குண்டுகள்கல் குவாரிகளில் பயன்படுத்தப்படும் ஜெலாட்டின் வகையை சேர்ந்தவை.
வெடித்திருந்தால் வீடு சிதறிப் போய் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என எனபோலீஸார் தெரிவித்தனர்.
இந்த குண்டுகள் வைத்தவர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கிருஷ்ணகிரிமாவட்டம் பாகலூரைச் சேர்ந்த முனி சந்திரா என்பவர்தான் இன்னொரு நபருடன்வந்து குண்டு வைத்தார் என்று தெரியவந்தது.
பெண் வீட்டாருக்கு உறவினர்தான் இந்த முனி சந்திரா. ரமேஷ் கல்யாணம் செய்துகொள்ளவிருந்த பெண்ணை முனி சந்திரா காதலித்துள்ளார். கல்யாணம் செய்துகொள்ள விரும்பினார்.
ஆனால் பெண்ணின் வீட்டார் அதை ஏற்க மறுத்து விட்டனர். ரமேஷுக்கு நிச்சயம்செய்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முனி சந்திரா, மணமகன் வீட்டைவெடிகுண்டு வைத்து தகர்க்க முயன்றுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் தற்போது கல்யாணம் நின்று போய் விட்டது. முனி சந்திராவால்ஏற்பட்ட பீதியிலிருந்து விடுபட எங்களுக்கு அவகாசம் தேவை. அதனால்தான்கல்யாணத்தை நிறுத்தி விட்டோம் என மாப்பிள்ளை ரமேஷ் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications