சிவாஜி கணேசன் சிலை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி:
சென்னை கடற்கரையில் நடிகர் சிவாஜிகணேசன் சிலையை நிறுவியதில் எந்தவிதவிதிமீறலும் இல்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலைக்கு அருகே சிவாஜி கணேசன் சிலைநிறுவப்பட்டது. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணையின்போது, நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குபாதிப்பாக எந்த கட்டுமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்று கடந்தஅதிமுக ஆட்சி காலத்தில் உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு உறுதி தெரிவித்திருந்தது.அதை மீறும் வகையில் தமிழக அரசு சிவாஜி சிலையை நிறுவியிருப்பதாகவாதாடப்பட்டது.
இதற்கு தமிழக அரசு பதிலளிக்கையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்விளக்கம் கேட்கவுள்ளதாகவும், தற்போது சிலையை நிறுவ அனுமதிக்குமாறும்கோரியது. இதையடுத்து சிவாஜி சிலை தொடர்பாக உச்சநீதிமன்றம்எடுக்கும்முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன்சிலையை திறக்கஅனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந் நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த விளக்க மனுவை நேற்று விசாரித்தநீதிபதிகள் பாலகிருஷ்ணன், ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,
சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என தமிழகஅரசு தெரிவித்துள்ளது. அப்படி இருக்கையில், இந்த மனு மீது விளக்கம் அளிக்கவேண்டியதில்லை என்று தீர்ப்பு கூறினர்.
இதன்மூலம் சிவாஜி சிலை தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications