குணா குகையில் விழுந்து மீண்ட கேரள இளைஞர்!

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்:

கொடைக்கானல் குணா குகையில் விழுந்து 5மணி நேரப் போராடட்த்துக்குப் பின்னர் பத்திரமாகமீட்கப்பட்டுள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஓவியர்.

கொடைக்கானலில் உள்ள ஒரு மலை குகையில் கமல்ஹாசனின் குணா படம் எடுக்கப்பட்டதால், அந்த குகைக்குகுணா குகை என்று பெயர் ஏறப்பட்டது. மிகவும் அபாயகரமான இந்த குகையில் விழுந்தவர்கள் யாரும்இதுவரை உயிர் பிழைத்ததில்லை.

இதுவரை இந்த குகையில் 50 பேர் விழுந்துள்ளனர். ஆனால் யாருமே உயிருடன் மீட்கப்பட்டதில்லை. உடல்கள்கூட கிடைக்காதாம். அந்த அளவுக்கு அபயாகரமான இந்த குகையில் விழுந்த கேரளவைச் சேரந்த ஓவியர்ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (25). தனது நண்பர்களுடன் கொடைக்கானல் வந்த சுபாஷ்,தனது நண்பர்கள் சசி உள்ளிட்டோருடன் குணா குகையை பார்க்க வந்தார்.

100 அடி ஆழம் உடைய அந்த குகைக்குள் இறங்கிப் பார்க்க ஆசைப்பட்ட சுபாஷ் கால் தடுமாறி உள்ளேவிழுந்து விட்டார். பதறிய நண்பர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரி திருநாவுக்கரசுதலைமையில் வனத்துறை ஊழியர்களும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து சுபாஷை காப்பாற்றமுயற்சித்தனர்.

Subash and Sasi

குகைக்குள் இறங்கினால் தான் அவரது நிலை தெரியும் என்பதால் உள்ளே இறங்க நண்பர்கள் வலியுறுத்தினர்.ஆனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல பயந்தனர். இதையடுத்து சசி தானே உள்ளே இறங்க முடிவுசெய்தார்.

இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு சசி மெதுவாக உள்ளே இறங்கினார். 60 அடி ஆழத்தில் சென்ற போதுசுபாஷ் ஒரு பாறை மீது விழுந்து கிடப்பதைப் பார்த்த அவர் தனது நண்பர் உயிருடன் தான் இருப்பதாக சப்தம்போட்டார்.

ஆச்சரியமடைந்த தீயணைப்பு வீரர்கள் அடுத்தடுத்து உள்ளே இறங்கினர். பின்னர் சுபாஷை சசி தனது உடலுடன்இறுக்கமாக கட்டிக் கொண்டார். அவர்களை தீயணைப்புப் படையினர் மெதுவாக மேலே இழுத்தனர். மயங்கியநிலையில் இருந்த சுபாஷுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 மணி நேரப் போராட்டத்துக்குப்பின்னர், சுபாஷ் பத்திரமாக மீட்கப்பட்டதால் அவரது நண்பர்கள் சந்தோஷமடைந்தனர்.

சசியின் துணிச்சலை பாராட்டினர். மரணக் குழியான குணா குகைக்குள் விழுந்து உயிர் பிழைத்த முதல் நபர்சுபாஷ் தான் என்று தீயணைப்புப் படையினர் வியப்புடன் தெரிவித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...