தேவாரம் பாட சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்த 338 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாடுவதற்கு தடையை நீக்க கோரி கோவிலுக்குள் நுழைய முயன்ற 338பேர் கைது செய்ப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள நால்வர் மடத்தை சேர்ந்தவர் ஓதுவார் ஆறுமுகசாமி. இவர் சிதம்பரம் நடராஜர் கோவில்சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடப் போவதாக கடந்த 2 மாதத்துக்கு முன்பு அறிவித்தார்.இதைத்தொடர்ந்து கோவில் தீட்சிதர்கள் முன்சீப் நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி தேவாரம் பாடுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அம்பேத்கார், நடராஜர் கோவிலில் ஆறுமுகசாமி தேவாரம் பாடுவதற்கு நிரந்தரதடை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம்பாடுவதற்கு உள்ள தடையை நீக்க வலியுறித்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடராஜர் கோவிலுக்குள்நுழையும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது.

அதன்படி இந்திய ஐனநாயக வாலிபர் சங்கத்தினர் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் பெரியார் சிலைஅருகில் கூடினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவரும், பெரம்பூர் சட்டமன்றஉறுப்பினருமான எஸ்கே.மகேந்திரன் அங்குள்ள நந்தனார் சிலைக்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்துபோராட்டத்துக்கு தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் பெரியார் சிலையில் இருந்து தொடங்கி மேலவீதி, தெற்கு வீதி, கீழ வீதி வழியாக சென்றுகோவிலுக்குள் நுழைய முயன்றனர். அப்போது நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறையிடம்ஒப்படைக்க வேண்டும். நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு உள்ள தடையை நீக்க வேண்டும்என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்து கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து கோவிலுக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். ஊர்வலமாக வந்தஎம்எல்ஏ மகேந்திரன் உள்பட 338 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது,

தமிழ்மொழி செம்மொழியாக மத்திய அரசு அறிவித்த போதிலும் நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம்தமிழில் பாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடராஜர் கோவிலுக்குள் நுழைய முயன்ற நந்தனாரை தீவைத்து எரித்தனர்.

அன்று ஜாதி தீண்டாமை நடந்தது. இன்று மொழி தீண்டாமை நடந்து வருகிறது. இதற்காக மாநில அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும். இந்தபிரச்சனையில் முன்சீப் நீதிமன்றம் மட்டுமே தடை விதித்து உள்ளது. இன்னும் இதற்கு மேல் எத்தனையோநீதிமன்றங்கள் உள்ளன.

எனவே தமிழக அரசு நெறிப்படுத்தி நடராஜர் கோவிலை இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.மேலும் இதற்காக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+