இன்பத்தமிழன் விடுத்த கொலை மிரட்டல்:விசாரிக்க டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் அதிமுக அமைச்சர் இன்பத்தமிழன் விடுத்த கொலை மிரட்டல் புகார்குறித்து விசாரணை நடத்துமாறு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக சேவகர்செண்பகமூர்த்தி. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.

அதில், அமைச்சர்ஸ்டாலின் மதுரைக்கு வந்தபோது அவரை கொலை செய்யமுயன்றதாக செய்திகள் வெளியாகின. இந் நிலையில, பழைய விரோதம் காரணமாகஎன்னை அந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க திமுக உத்தரவின் பேரில் போலீஸார்முயற்சித்து வருவதாக ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வெளியானது.

அதற்கு நான் மறுப்பு தெரிவித்திருந்தேன். இந்த நிலையில் எனது செல்போனுக்குமுன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் போன் செய்து, முன்னாள் முதல்வர்ஜெயலலிதாகூறித்தான் ஸ்டாலினை நான் கொலை செய்ய முயற்சித்ததாக ஒப்புக் கொண்டுநீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என மிரட்டினார்.

மேலும், உங்களை ஜாமீனில் எடுக்க வேண்டியது, எனது பொறுப்பு என்றும் கூறினார்.ஆனால் நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அதைக்கேட்டு கோபமடைந்தஇன்பத்தமிழன், அப்படி நீ செய்யாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டிவரும். உனது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்றார்.

இதுகுறித்து போலீஸ் டிஜிபிக்கு புகார் கொடுத்தேன். எனது வீட்டைச் சுற்றிலும்அடையாளம் தெரியாத சிலர் அவ்வப்போது வந்து கொண்டிருந்ததால் உயிருக்குஆபத்து ஏற்பட்டதாக உணர்ந்து, சென்னைக்கு வந்து விட்டேன்.

திமுக தூண்டுதலின் பேரிலேயே இன்பத்தமிழன் செயல்படுவதாக நினைக்கிறேன்.எனவே அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என நான் டிஜிபியிடம் கொடுத்த மனுமீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தனது ரிட் மனுவில் செண்கமூர்த்தி கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ரவிராஜபாண்டியன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்தநீதிபதி, புகார் மனு மீது 3 மாதத்திற்குள் சட்டபபடி விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

இன்பத்தமிழன் இப்போது திமுகவில் இருப்பது நினைவுகூறத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+