கலாம் விமானத்துக்கு மிரட்டல் விடுத்த நகை கடை ஊழியர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை :

ஜனாதிபதி அப்துல் கலாம் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரைபோலீஸார் கைது செய்துள்ளனர். விளையாட்டுக்காக மிரட்டல் விடுத்ததாக அந்த நபர்கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னைக்கு வந்த அப்துல் கலாம், திங்கள்கிழமைஇரவு டெல்லி திரும்புவதாக இருந்தது. ஆனால் அவரது விமானம் கிளம்ப சிலநிமிடங்களே இருந்த நிலையில விமானத்தில வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாககாவல்துறை கட்டுப்பாட்டு அறைகக் மர்ம தொலைபேசி வந்தது.

இதனால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில்பெரும் பீதி ஏற்பட்டது. குடியரசுத்தலைவர் விமானத்துக்கே வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்புஏற்பட்டது.

தீவிர சோதனையில் வெடிகுண்டு தகவல் புரளி என தெரிய வந்தது. இதையடுத்துஅதிகாலை 2 மணிக்குத்தான் கலாம் டெல்லி திரும்பிச் சென்றார்.

கலாமை பத்திரமாக அனுப்பி வைத்த பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைப்பிடிக்க போலீஸார் முடுக்கி விடப்பட்டனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணைமேற்கொண்ட போலீஸார் கூடுவாஞ்சேரி அருகே உள்ள அய்யஞ்சேரி ஊரப்பாக்கம்பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், ராஜு, ராஜன், சுரேஷ், பாலமுருகன் ஆகியோரைபிடித்தனர்.

இந்த ஐவரில் ஒருவர்தான் மிரட்டல விடுத்திருக்க வேண்டும் என்று போலீஸார்சந்தேகித்தனர்.

ஆனால் இவர்கள் அல்லாமல் வேறு ஒரு நபர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.பேரின்பராஜ் என்ற அந்த நபர்தான் கலாம் விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவர் என்றுஉறுதியாகிவிட்டது.

இத்தகவலை டிஜிபிமுகர்ஜியும், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகாசரணும் தெரிவித்த்னர்.

Lathika with DGP Mugarji, inside Perinbaraj
பிடிபட்ட பேரின்பராஜின் புகைப்படத்தை
காட்டும் லத்திகா சரண், உடன் டிஜிபி முகர்ஜி

லத்திகா சரண் செய்தியாளர்களிடம் கூறுகையில், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குபோனில் பேசிய நபர், ஆளுனர் விமானத்தில் குண்டு வைக்கிப்பட்டிருப்பதாக கூறிவிட்டு வைத்து விட்டார்.

குடியரசுத் தலைவர் என்பதைத்தான் அந்த நபர் தவறுதலாக ஆளுநர் என்றுகூறியுள்ளார். இதையடுத்து குடியரசுத் தலைவரின் விமானத்தில் தீவிர சோதனைபோட்டோம். அதில் குண்டு எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து குற்றவாளியைப் பிடிக்க விசாரணை முடுக்கி விடப்பட்டது. தற்போதுஅந்த நபர் பிடிபட்டுள்ளார். அவரது பெயர் பேரின்பராஜ். 21 வயதான இவர் நீலகிரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னை தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி நகைக் கடையில்வேலை பார்த்து வந்தார்.

இக்கடைக்கு வெளியே டாடா இண்டிகாம் டெலிபோன் நிறுவனத்தின் 1 ரூபாய்போட்டு பேசும் போன் பூத் உள்ளது. அங்கிருந்துதான் பேரின்பராஜ் கட்டுப்பாட்டுஅறைக்கு போன் செய்து குண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

கட்டுப்பாட்டு அறையில் உள்ள காலர் ஐடியில், 800 என்ற எண் பதிவாகியிருந்தது.இதனால் போலீஸாருக்கு முதலில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் டாடா இண்டிகாம்நிறுவனத்தில் விசாரித்தபோது, பொது தொலைபேசி பூத்துகளுக்கு வழங்கப்படும்ரகசியக் குறியீட்டு எண் என்று விளக்கினர்.

இதனால் பூத்தை அடையாளம் காண்பது எளிதானது. அதைத் தொடர்ந்து போலீசார்மிகத் தீவிரமாக விசாரித்ததில் பேரின்பராஜ் எளிதில் சிக்கினார். அவரைப் பிடிக்கஜி.ஆர்.டி. நிறுவனத்தினரும், அதன் ஊழியர்களும் பெரும் உதவியாக இருந்தனர்.

பேரின்பராஜ் போன் பேசியதை ஊழியர்களில் சிலர் பார்த்துள்ளனர். மேலும்,பேரின்பராஜ் அந்த குறிப்பிட்ட நேரத்தில் கடையிலிருந்து வெளியேறியது, கடையின்ரகசியக் கேமராவிலும் பதிவாகியிருந்தது.

பேரின்பராஜை 48 மணி நேரத்தில் சைபர் கிரைம் போலீஸார் பிடித்து விட்டனர்.அவரிடம் விசரைண நடத்தியபோது, விளையாட்டுக்காக செய்தேன் என்று ஒப்புக்கொண்டுவிட்டார்.

இருந்தாலும் இதுபோன்ற விஷமத்தனத்தில் ஈடுபடுவோருக்கு கடும் எச்சரிக்கையாகஇருக்க வேண்டும் என்பதற்காக பேரின்பராஜ் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்அவருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை கிடைக்கும் என்றார் லத்திகா சரண்.

உளவுப் பிரிவு ஐஜி மாற்றம்:

இந் நிலையில் உளவுப் பிரிவு ஐஜி மாற்றப்பட்டு புதிய ஐஜியாக சுப்பிரமணியம்நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மிரட்டல் சம்பவத்துக்கும், இந்த இடமாற்றத்துக்கும் தொடர்பு உண்டா என்றுசெய்தியாளர்கள் டிஜிபி முகர்ஜியிடம் கேட்டபோது,

அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது நிர்வாகரீதியிலான மாற்றம் தான்என்றார்.

கைது செய்யப்பட்டுள்ள பேரின்பராஜ் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ளஎமரால்டு கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ராஜகோபால் ஒரு விவசாயி.தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டுமனைவிகளாம்.

பிளஸ்டூ வரை படித்துள்ள பேரின்பராஜ் 2 மாதத்திகுமுன்பு தான் ஜி.ஆர்.டி. நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். மாதம் ரூ. 3,000 சம்பளம்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து போலீசாரிடம் பேரின்பராஜ் தந்தவாக்குமூலத்தில்,

குடியரசுத்தலைவர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறினால் விமானத்தைநிறுத்தி விடுவார்கள் என்று நினைத்தேன். இது குறித்து என்னுடன் பணியாற்றும் சிலஊழியர்களுடனும் பேசினேன். ஆனால் அவர்கள் என்னை எச்சரித்தனர்.

இருந்தாலும் அந்த எண்ணம் என்னை விட்டுப் போகவில்லை. பொதுத்தொலைபேசியில் இருந்து பேசுவோம். யாரும் கண்டுபிடிக்க முடியாது என்றுநினைத்துத்தான் பேசினேன். நான் போன் செய்ததும் எதிர்முனையில் போலீஸார்எடுத்ததும் பயமாகி விட்டது.

இதனால்தான் குடியரசுத் தலைவர் என்று சொல்வதற்குப் பதில் ஆளுனர் என்றுசொல்லிவிட்டேன். இவ்வளவு பெரிய விபரீதமாக இதுமாறும் என நான் நினைக்கவேஇல்லை. இபபோதுதான் எனது தவறை உணர்கிறேன்.

போலீசார் இவ்வளவு வேகத்தில் என்னை மடக்கிவிடுவார்கள் என்று நினைக்கவேஇல்லை என்று கூறியுள்ளார் பேரின்பராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+