விரைவில் மிகப் பெரிய விலை கொடுப்பார் ராஜபக்ஷே: புலிகள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் சமாதானப் பேச்சுக்கு இனி வாய்ப்பில்லை என விடுதலைப் புலிகளின் அரசியல்பிரிவுத் தலைவர் தமிழ்சசெல்வன் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் இலங்க்ைகான நார்வே தூதுவர் ஹன்ஸ் பிட்ஸ்கர் தலைமையிலான குழுவினரை சந்தித்த பின்னர்நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நார்வே தூதரைக் கொண்ட குழுவினரை சந்தித்து விரிவாகக் கலந்துரையாடியிருக்கிறோம். ராஜபக்சே அரசு,இலங்கை ராணுவத்தினரின் பயங்கரவாதம் மற்றும் வன்முறைகள் பற்றியும் விளக்கினோம். போர் நிறுத்தஉடன்பாட்டுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்காதது குறித்தும் அவர்ளிடம் பேசினோம்.

அண்மையில் இலங்கை ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் எமது மக்கள்மீதான குண்டு வீச்சுகள், படுகொலைகள் மற்றும் காணாமல் போதல் தொடர்பாகவும் விரிவாகவிளக்கியிருக்கிறோம்.

திருகோணமலையில் சம்பூர் பகுதியை ஊடுருவி ஆக்கிரமித்துள்ள ராணவத்தினருக்கு எங்களது வன்மையானகண்டத்தையும் தெரிவித்தோம். போர் நிறுத்த ஒப்பந்தத்தை இல்லாது செய்யும் இந்த நடவடிக்கையினால்எதிர்காலத்தில் சமரச முயற்சிகள் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுக்கும் அனைத்துநடவடிக்கைகளும் சீர்குலைக்கப்பட்டுள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நாளில் இருதரப்பு கட்டுப்பாட்டுப் பகுதிகள் எந்த வரையறையில்இருந்தனவோ அந்த வரையறைக்குள் மீண்டும் கொண்டு வரப்படாமல் இனி வரும் காலங்களில் எந்த சமரசமுயற்சிகளுக்கு இடமில்லை என்ற எங்களது தலைமையின் நிலைப்பாட்டை நார்வே குழுவினரிடம்தெரிவித்துள்ளோம்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இருதரப்பு கட்டுப்பாட்டுப் பகுதிகள் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.போர் நிறுத்த மீறல்களுக்கு அப்பால் இந்த கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீறுகின்றபோது ஒருதரப்பானது யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து முழுவதும் விலகுவதாகவே அர்த்தம் கொள்ளப்படும்.

அந்த வகையில் இலங்கை அரசும் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டதாக சம்பூர்நடவடிக்கையின் மூலம் நாங்கள் முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

கண்காணிப்புக் குழுவினரும், அனுசரணையாளர்களும் மற்றும் சர்வதேச சமூகமும் இந்த நிலைப்பாட்டைவிளங்கிக் கொள்ள வேண்டும் என்று நம்புகிறோம்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் கடைப்பிடிக்காத நிலைக்கு இலங்கை அரசு தள்ளியிருக்கிறது.ராணவ நடவடிக்கைகளையும், குண்டு வீச்சுக்களையும், படுகொலைகளையும் ராணுவ வெறியாட்டங்களையும்எங்களது தேசத்தில், மக்களிடத்தில் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்ற நிலையில் புலிகள் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

தமிழீழ மக்களின் பலத்தையும், உணர்வையும் ராஜபக்சே சீண்டிப் பார்த்திருக்கிறார். அதற்கான விளைவை அவர்சந்திப்பார். எங்கள் மக்களை அழித்து பெரும் அவலத்தில் தள்ளிக் கொண்டு ஒரு பெரிய வெற்றி விழாவாகமகிந்த ராஜபக்சே கொண்டாடிக்கொண்டிருப்பது என்பது தமிழ் மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களையும்பெரிய அவலத்துக்குள் தள்ளுகிற ஒரு மோசமான செயல்.

தமிழ் மக்களை அவலத்துக்குள்ளும், அழிவுக்குள்ளும் தள்ளிவிட்டு இன்று சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்திபெரிய வெற்றியைக் கொண்டாடச் செய்கின்ற இந்த நடவடிக்கையானது சிங்கள மக்களுக்கும் இந்த அவலநிலையை ராஜபக்சே வெகுவிரைவில் தோற்றுவிக்கப் போகிறார்.

இருதரப்பும் வன்முறையை நிறுத்தி போர் நிறுத்தத்தை மதித்து சமரச முயற்சிகளை தொடர வேண்டும் என்றுநார்வே தூதுவர் எங்களிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு எங்களது நிலைப்பாட்டை தெளிவாக்கியுள்ளோம்.போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை முற்றாகச் செயலிழக்கச் செய்கிற ஆக்கிரமிப்பு நடவடிக்கைய இலங்கை அரசும்,ராணுவமும் மேற்கொண்டுள்ளன.

இருதரப்பு கட்டுப்பாட்டுப் பகுதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு இரு படைகளும் சமநிலையில் தான் இந்தஒப்பந்தம் கையொழுத்திடப்பட்டது. இந்த படை சமநிலையை சீர்குலைக்கும் நடவடிக்கையாக இன்று சம்பூர்பகுதிக்குள் ராணுவம் ஊடுருவி ஆக்கிரமித்துள்ளது.

இதற்கு முடிவு கட்டப்படாமல் இனி ஒரு போதும் சமரச முயற்சிகளுக்கோ, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கோவாய்ப்பில்லை என்று எங்கள் தலைமையின் நிலைப்பாடு விளக்கப்பட்டுவிட்டது.

சமாதான காலத்தைப் பயன்படுத்தி படை பலத்தை கட்டியெழுப்பிக் கொண்டு எங்களது தாயக பகுதிக்குள் பெரும்படையெடுப்புகளைச் செய்ய முனைந்து நிற்கிறது இலங்கை அரசு.

தமிழர் தரப்பு கொடுக்கும் நல்லெண்ண சமிக்ஞைகளைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை தரப்பானதுஒவ்வொரு காலப்பகுதியிலும் இத்தகைய படையெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முந்தையஆட்சி காலத்தை விட இன்னும் ஒரு படிமேலே போய் ராஜபக்சே இதனை செய்து கொண்டிருக்கிறார்.

இதற்கான எதிர் விளைவை அவர் மிக விரைவில் சந்திப்பார். சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் உருவானசமாதான காலத்தில் ராணுவத்தை பலப்படுத்திக் கொண்டு ராணுவ வன்முறையை, அரசு பயங்கரவாதத்தைக்கட்டவிழ்த்துவிட்டு பின்பு அதற்கு பெரிய விலை கொடுத்து சரணாகதி அடைந்த நிலைமைதான் இவர்களுக்கும்ஏற்படும் என்று நினைக்கிறேன்.

இன்று சம்பூரை ஆக்கிரமித்திருக்கலாம். ஆனால் நாளை பெருமளவு பகுதிகளிலிருந்து இலங்கை படைகள்விரட்டியடிக்கப்படும் காலம் மிக விரைவில் வரும். சந்திரிகா காலத்தில் விடுதலைப் புலிகள் தான் வன்முறையைத்தூண்டினார்கள் என்றும் யுத்தத்தைத் தொடங்கினர் என்றும் வதந்திகள் கட்டவிழ்த்துவிடப்பட்டந.

இம்முறை சர்வதேச சமூகத்துக்கு தெளிவாக தெரியும். யார் யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். யாருடையபகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. யார் படுகொலைகளையும், வன்முறைகளையும், பயங்கரவாதசெயல்களையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் என்று.

இப்போது போர் நிறுத்தம் அமுலில் இருப்பதாகக் கூறிக் கொண்டே எங்களது பகுதிகளில் குண்டு வீச்சுக்களும்,இடப்பெயர்வுகளும், படுகொலைகளும், ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை சர்வதேசசமூகத்துக்கு புரிய வைத்துள்ளோம். ஆகவே இதற்கான விளைவை ராஜபக்சே எதிர்கொள்வார் என்பதில்சந்தேகமில்லை.

சம்பூருக்குள் ஊடுருவி ஆக்கிரமித்து அதனை ஒரு பெரிய வெற்றியாக சிங்கள மக்களுக்குக் காட்டி வெற்றிக்கொண்டாட்டங்களைக் கொண்டாடுகின்றனர். இலங்கை அரசும், ராணுவமும் படுதோல்வியை பின்னடவைசந்தித்து மண்டியிடும் நிலை விரைவில் வரும்.

இலங்கை அரசின் கபடத்தனத்தையும் முழு மக்களுமே இன்று புரிந்து கொண்டுள்ளனர். தங்களைத் தாங்களேதற்காத்துக் கொள்ளவும் இந்த விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தவும் மக்கள் பெரிய அளவில்அணிதிரண்டு கொண்டிருக்கின்றனர்.

மிக விரைவில் இலங்கை படைகள் விரட்டியடிக்கப்படும் நிலை முழு அளவில் விரைவில் உருவாகும் என்றார்தமிழ்ச்செல்வன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+