சாராய வழக்கு: கணவரை மீட்க குழந்தைகளுடன் கமிஷனரிடம் மனைவி புகார்!
சென்னை:
சென்னையில் சாராய கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவரை விடுதலை செய்யக் கோரிபள்ளிக்கூட சீருடையுடன் தனது 3 குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்கொடுத்தார் மனைவி.
செங்கல்பட்டு அருகே உள்ள வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானப் பிரகாசம். இவரது மனைவி ஹேமலதா,தனது 3 குழந்தைகளுடன் இன்று ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் வந்த 3 குழந்தகளும்பள்ளிக்கூட சீருடையில் இருந்தன.ஆணையர் லத்திகா சரணை சந்தித்து ஹேமலதா ஒரு மனுவைக் கொடுத்தார். அதில், எனது கணவர் சொந்தமாககார் வைத்து அதை டாக்சியாக ஓட்டி வருகிறார். எங்களுக்கு பிரதீபா, பிரியங்கா என்ற மகள்களும், மோனிஷ்என்ற மகனும் உள்ளனர்.எனது கணவர் புரட்சி பாரதம் கட்சியின செங்கை நகர செயாளராகவும், கார் டிரைவர் சங்க தலைவராகவும்உள்ளார்.
கடந்த மாதம் 20ம் தேதி எனது கணவரை அணுகிய சிலர் சென்னக்கு செல்ல வேண்டும் என்று பேசி காரைவாடக்ைகு எடுத்துச்சென்றனர். இந்த நிலையில் அண்ணா நகரில் வைத்து எனது கணவரையும், அதில் பயணம்செய்த ஒருவரையும் கைது செய்து விட்டனர். என்னை எதற்காக கைது செய்கிறீர்கள் என எனது கணவர்கேட்டபோது, காரில் வந்தவர் சாராய அதிபர். அதனால் தான் உன்னையும் கைது செய்கிறோம் என்று போலீஸார்கூறியுள்ளனர்.
எனது கணவர் கைது செய்யப்பட்ட விவரமும், சிறையில் அடைக்கப்பட்டதும் 3 நாட்களுக்கு முன்பு தான் எனக்குதெரிய வந்தது. எனது கணவர் அப்பாவி. அவர் மீது எந்த வழக்கும் இல்லை. அவரை சாராய கடத்தல் வழக்கில்கைது சய்துள்ளனர். குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப் போவதாக அறிகிறேன். அவரை விடுதலைசெய்ய உதவ வேண்டும் என்று கோரியிருந்தார் ஹேமலதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications