வாக்காளர் பட்டியலில் இஸ்லாமிய பெண்களின்புகைப்படம் இடம் பெறலாம்: உயர்நீதிமன்றம்
சென்னை:
புகைப் பட வாக்காளர் பட்டியலில் இஸ்லாமியப் பெண்களின் புகைப் படங்களைசேர்ப்பதற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.
செனனையைச் சேர்ந்த அக்மல்கான் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைதாக்கல் செய்தார். அதில், தேர்தல் ஆணையம் தயாரித்து வரும் புகைப்பட வாக்காளர்பட்டியலில் இஸ்லாமிய பெண்களின் புகைப் படங்களையும் சேர்த்து வருகிறது.இஸ்லாமிய முறைப்படி பெண்கள் தங்களது முகத்தை பிறர் பார்க்கும் வண்ணம்காட்டக் கூடாது. மேலும், இஸ்லாமிய பெண்களின் புகைப் படங்கள் தவறுதலாகபயன்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது.
எனவே இஸ்லாமியப் பண்களின் புகைப் படங்களை வாக்காளர் பட்டியலில்சேர்க்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் கொண்ட பெஞ்ச்விசாரித்தது.
இதையடுத்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்,கேரளாவிலும், மதுரை மத்திய தொகுதியிலும் புகைப்பட வாக்காளர் பட்டியல்தயாரிக்கும் பணி முடிவடைந்து விட்டது.
புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் மூலம் கள்ள ஓட்டுக்களை தடுக்கமுடியும் என்று விளக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. புகைப்படத்துடன் கூடியவாக்காளர் பட்டியலை வெளியிடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.அதில் தலையிட நீதிமன்றம் விரும்பவிலலை.
திட்டமிட்டபடி மதுரை மத்திய தொகுதியில் புகைப்பட வாக்காளர் பட்டியலைவெளியிடலாம் என்று தீர்ப்பளித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications