கற்பழிப்பு-2 மத போதகர்கள் மீது பெண் புகார்
தர்மபுரி:
தனி அறையில் அடைத்து வைத்து தன்னை கற்பழித்து விட்டதாக 2 மத போதகர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.
தர்மபுரியை அடுத்த சோகத்தூரைச் சேர்ந்த பச்சையப்பனின் மகள் வாணி (18). இவர் போலீசில் கொடுத்துள்ளபுகாரில், ஆட்டோ டிரைவர் சின்னசாமி என்பவர் தன்னை நிர்வாணப் படம் எடுத்து, அடிக்கடி மிரட்டிகற்பழித்தார் என்றும், அவருடன் சேர்ந்து 2 மத போதகர்களும் தன்னை கற்பழித்ததாக புகார் கூறியுள்ளார்.மேலும் இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டரிடமும் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது,
நான் 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நான் எனதுதம்பி மணிகண்டன், பாட்டி விஜயம்மாள் ஆகிய 3 பேரூம் தர்மபுரி பஸ் நிலையத்தில் திருப்பூருக்கு கூலிவேலைக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தோம்.
அப்போது எங்கள் ஊரை சேர்ந்த கோவிந்தன் மகன் சின்னசாமி, சரவணன் ஆகியோர் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தனர். எங்களை பார்த்து எனக்கு வேலை வாங்கி கொடுப்தாகவும் கூறினார்கள். சின்னசாமியை நம்பிஎன்னை என் பாட்டி அவருடன் அனுப்பி வைத்து விட்டார். நான் அவருடன் திருப்பூருக்கு சென்றுவிட்டேன்.
திருப்பூர் பஸ் நிலையத்திலேயே என்னிடம் இருந்த நகைகளையும், என்னிடம் இருந்த ரூ.4 00 பணத்தையும்வாங்கிக் கொண்டு ராஜாத்தி என்பவர் மூலம் ஒரு ரெடிமேடு துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டான்.
என்னை திருப்பூர் வெள்ளியங்காட்டில் தங்க வைத்திருந்தான். நான் வேலைக்கு சென்று வந்த சமயங்களில்அவன் வீட்டில் சமைப்பான். என்னை ஒவ்வொரு இரவும் என்னுடைய விருப்பத்திற்கு மாறாக தவறாக நடந்துகொண்டான். நான் எவ்வளவோ தடுத்தும், போராடியும் என்னை அவன் விடவில்லை.
எனக்கு வெள்ளை நிறத்தில் மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து என்னை மயக்கமாக்கி நிர்வாணமாக பலவிதங்களில் போட்டோ எடுத்து உள்ளான் என்பதை பின்னர் எனக்கு சின்னசாமி காட்டும் போது தான் தெரிந்துகொண்டேன். மேலும் நீ எனக்கு தான் சொந்தம் என்று கூறினான். உன் குடும்பத்திற்கோ, மற்றவர்களுக்கோ இந்தசம்பவம் குறித்து தெரிவித்தால் என்னை ஊரறிய அவமானப்படுத்தி விடுவேன் என்று மிரட்டினான்.
சின்னச்சாமியுடன் சேர்ந்து பெண்ணாகரம் கிருஸ்தவ மத போதகர் ஜெபக்குமார், தர்மபுரி மத போதகர் பால்ராஜ்ஆகியோரும் என்னை கற்பழித்தனர். இதனால் எனது சித்தப்பாவை அழைத்து வந்து அனைத்து மகளிர் போலீஸ்நிலைத்தில் புகார் கொடுத்துள்ளேன்.
என் வாழ்க்கையை கெடுத்த சின்னசாமி, ஜெபக்குமார், பால்ராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படிகேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இந்த மனு குறித்து விசாரணை நடத்தும்படி தர்மபுரி துணை போலீஸ் எஸ்பி அனைத்து மகளிர் காவல் நிலையபோலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் வாணி கொடுத்த புகார் மனு மீது ஒரு மாதமாக போலீசார் எந்த நடவடிக்கை எடுக்காததால்பொதுமக்களும், போலீஸ் நண்பர்கள் குழுவினரோடு இணைந்து வாணியை கற்பழித்த சின்னசாமியை தேடிவந்தனர்.
அப்போது சின்னச்சாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலையனூர் பகுதியில் அவரது மாமியார் வீட்டில்தங்கி இருந்து தெரியவந்தது. இதனால் அவர்கள் அங்கு சென்று சின்னசாமியை பிடித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தர்மபுரி மகளிர் காவல் நிலையத்தில் சின்னச்சாமி மீது வழக்குப்பதிவு செய்துசின்னசாமியை கைது செய்தனர்.
கைதான சின்னசாமி ஆட்டோ டிரைவர் ஆவார். இவர் தர்மபுரி மாவட்டம் உடைசல்பட்டியில் இதே போல ஒருபெண்ணை கற்பழித்ததாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து புகார் கொடுக்கததால் அவர் மீது வழக்கு எதுவும்பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்தும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications