சென்னையில் ஐ.டி. அகாடமி: கருணாநதி
சென்னை:
சென்னையில் தகவல் தொழில்நுட்ப அகாடமி அமைக்கப்படும் என்று முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக அரசின் எல்காட் நிறுவனம், இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்துகனெக்ட் என்ற பெயரில் சென்னையில் தகவல் தொழில்நுட்ப கண்காட்சி மற்றும்கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன.இதை தொடங்கி வைத்து கருணாநிதி பேசுகையில், கடந்த 1997ம் ஆண்டுதமிழகத்தில் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. அதன் காரணமாகதமிழகம் தகவல் தொழிலநுட்பத்துறையில் இன்று பிரமாண்டமான வளர்ச்சியைப்பெற்றுள்ளது.
சென்னையைப் போலவே, மதுரை,கோவை உள்ளிட்ட நகரங்களிலும் தகவல்தொழிலநுட்ப புரட்சி விரிவுபடுத்தப்படும். உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்கள், உதிரிபாக நிறுவனஙக்ள் தமிழகத்தைஏற்ற இடமாக தேர்வு செய்து இங்கே வந்து கொண்டுள்ளன. இது மேலும்விரிவடையும் என நம்புகிறேன்.
போதிய கட்டமைப்பு வசதிகள், நல்லரசு ஆகியவை இங்கே இருப்பதால்தான் இந்தஅளவுக்கு உலகின் முன்னணி நிறுவனங்கள் தமிழகத்திற்கு வரக் காரணம்.சென்னையில், தகவல் தொழிலநுட்ப அகாடமியை ஏற்படுத்த தமிழக அரசு உரியநடவடிக்கைஎடுக்கும் என்றார்.
நிகழ்ச்சியில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பரிதிமாற் கலைஞர் வாரிசுகளுக்கு 15 லட்சம்:
தமிழை செம்மொழியாக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவரான பரிதிமாற் கலைஞரின் வாரிசுகளுக்கு ரூ. 15 லட்சம் பரிவுத் தொகைவழங்க கருணாநிதி அனுமதி அளித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் பரிதிமாற் கலைஞர். இவரது இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி. தமிழ் மீது கொண்டபற்று காரணமாக தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர்.
இவரது வாரிசுகள் கடும் வறுமையில் வாடி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் பரிதிமாற் கலைஞரின் வாரிசுகளுக்குரூ.15லட்சம் பரிவுத் தொகை கொடுக்க முதல்வர் கருணாநிதி அனுமதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக பட்ஜெட்டில் தமிழை செம்மொழி என்று அறிவிக்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவரும், நூறாண்டுகளுக்கு முன்பே தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என்று தூய தமிழில் மாற்றிக் கொண்டவர்.
திருப்பரங்குன்றத்தில் பிறந்து இந்த திருவிடம் முழுவதும் புகழ் செதுக்கிய வருமான பெரும் மகனாரது நினைவைப் போற்றும் வகையில், அவரது நூல்களைஅரசுடமையாக்கப்பட்டு அவரது வழித்தோன்றல்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
அதற்கேற்ற வகையில், பரிதிமாற் கலைஞரின் கலாவதி, ரூபாவதி, தமிழ்மொழியின் வரலாறு முதலான புத்தகங்கள் அனைத்தையும் நாட்டுடமையாக்கிஅவரது குடும்பத்தாருக்கு ரூ. 15 லட்சம் பரிவுத் தொகை வழங்கிட முதல்வர் அனுமதி அளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
போட்டோ வேலு: கருணாநிதி குட்டி கதை
இதற்கிடையே தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்கள் சங்கத் தொடக்கவிழாவில் ஒரு புகைப்படக்காரரின் கதையைக் கூறி புகைப்படக்காரர்களை சிரிக்கவைத்தார் கருணாநிதி.
தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் சங்கம் சென்னையில்தொடங்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்குஆளுநர் பர்னாலா தலைமை தாங்கினார். முதல்வர் கருணாநிதி சங்கத்தையும்,சங்கத்தின் இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், புகைப்படக்காரர்கள் பற்றிச் சொல்லவேண்டுமானால் எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரது பெயர் ஜெயங்கொண்டம்வேலு. கல்லக்குடி போராட்டத்தின் போது நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.அப்போது வேலுவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவர் என்னிடம் அடிக்கடி தனது ஊர் கதை, வீட்டுக் கதைகளை எல்லாம் கூறுவார்.சூரிய காந்தி என்ற படத்தைக் கூட அவர் எடுத்துள்ளார். அந்தப் படம் தான் பெரியார்பார்த்த ஒரே தமிழ்ப் படம் என்று சொல்வார்கள். அவர் என்னிடம்அறிமுகமாகியபோது, நான் தான் ஜெயங்கொண்டம் வேலு. என்னை செத்தபோட்டோ ஜெயங்கொண்டம் வேலு என்று தான் கூப்பிடுவார்கள் என்றார்.
அது என்ன செத்த போட்டோ என்ற அடைமொழி என்று நான் கேட்டேன். அதற்குஅவர் பிணத்தை யாரும் படம் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நான் மட்டும் தான்செத்த பிணத்தை படம் பிடிப்பேன். அதனால் தான் அந்தப் பெயர் வந்தது என்றார்.
ஒரு நாள் அந்த ஊரில் மணியக்காரர் இறந்து போனார். அப்போது வேலு ஊரில்இல்லை. தேடிப் பார்த்தார்கள், வேலு கிடைக்கவில்லை. பின்னர் பிணத்தைமயானத்திற்குக் கொண்டு சென்றார்கள். அப்போது ஜெயங்கொண்டம் வேலு வந்துவிட்டார்.
உடனே அவரை மயானத்திற்கு அழைத்து சென்ற புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள்.அவரும் படம் எடுத்தார். பின்னர் பிணத்தை எரித்தனர். மறு நாள் எடுத்த படத்தைப்பார்த்துள்ளார் வேலு. படம் நன்றாக இருக்கிறது. தலை மட்டும் தான் இல்லை.
அவர் என்ன செய்வார், பிணத்தை புதைக்காமல் எரித்து விட்டனர். இதனால் எரிந்தபோன தலையைத் தவிர உடலின் மற்றபாகங்களை தான் அவரால் எடுக்க முடிந்தது.அவருக்கு அப்படி ஒரு பிரச்சினை.
புகைப்பட கலைஞர்கள் இங்கே சில கோரிக்கைகளை வைத்தனர். என்றைக்கும்பத்திரிக்கைக்காரர்களின் கோரிக்கையை நான் புறக்கணித்தவன் இல்லை. யார்இடத்தில் கேட்க வேண்டுமோ அவர்களிடத்தில் கேட்டுள்ளீர்கள். கேட்டால்கிடைக்கக்கூடிய இடத்தில் தான் கேட்டிருக்கிறீர்கள் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, இந்து ஆசிரியர் ராம்,நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் ஏராளமான புகைப்படக்காரர்கள் கலந்துகொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications