அஸ்ஸாமை இன்று பூகம்பம் தாக்கும்: சென்னைநிபுணர் எச்சரிக்கையால் பெரும் பதற்றம்!
குவஹாத்தி:
அஸாம் மாநிலத்தில் இன்று காலை பயங்கர பூகம்பம் தாக்கும் என்று சென்னையைச்சேர்ந்த புவியியல் நிபுணர் கூறியதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.மாநிலம் முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் வேங்கடநாதன்.இங்கிலாந்தில் உள்ள சர்வதேச நில நடுக்க கணிப்பு கழக நிர்வாககுழுஉறுப்பினாகவும் வேங்கடநாதன் உள்ளார்.வேங்கடநாதன் நேற்று பெங்களூரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கடந்த1950ம் ஆண்டு ஆகஸட் மாதம் 15ம் தேதி அஸாம் மாநில பகுதியில், சூரியன்,சந்திரன், புதன் ஆகிய கோள்கள் ஒரே நேர் கோடடில் வந்தன. அப்போது அஸாம்மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயஙக்ர பூகம்பம் அதாவது 8.1 ரிக்டர்ளவிலாபூகமபம் ஏற்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். அதேபோல 8ம் தேதி (அதாவது இன்று)சூரியன், சந்திரன், புதன் ஆகியகோள்கள் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. எனவேஇன்று காலை 8.21 மணிக்கு அசாம் மாநிலத்தில் பயங்கர புகம்பம் ஏற்படும்.திப்ரூகரை மையமாக கொண்டு இந்த பூகம்பம் ஏற்படலாம்.
இந்த பூகம்பத்தின் அளவு 7 முதல் 8 ரிக்டராக இருக்கக் கூடும் . எனது இந்தக் கணிப்புபலிக்க 70 சதவீத வாய்ப்புகள் உள்ளன. கடந்த மே மாதம் 25 மற்றும் 26 ஆகியதேதிகளில் இந்தோனேசியாவில் இது போன்று சூரியன், சந்திதரன், புதன் ஆகியகிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வந்தபோது நில நடுக்கம ஏற்பட்டதுநினைவிருக்கலாம்.
இரண்டு அல்லது 3 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரும் போது இதுபோன்றபூகம்பங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொடர்பான செய்திகள்பு பூமியில்இதுபோல 4000 பூகம்பங்கள் நடந்துள்ளன.
தற்போது சூரியன், சந்திரன், புதன் ஆகியகிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரும் போதுஏற்படும் திடீர் விசை மாற்றம காரணமாக பூமியின் சுழற்சியில் பெரும் மாற்றம்ஏற்படும். இதன் பாதிப்பாக பூகம்பம் ஏற்படும்.
திப்ரூகர் மாவட்டத்தின் தென் கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் இந்தபூகம்பம்த்தின் யைமம் இருக்கும். சுமார் 60 விநாடிகள் இந்த பூகம்பம் நீடிக்கும்.பாதிப்பும் பயங்கரமாக இருக்கும் . திப்ரூகர் மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகம்என்பதால் உயிரிழப்பும் அதிகமாக இருக்கும்.
இந்த பூகம்பத்தைக் கணிக்க எனக்கு 19 நாட்கள் பிடித்தன என்று கூறியுள்ளார்வேங்கடநாதன்.
அவரது இந்த கணிபப் அஸாம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேங்கடநாதனின கணிபபு குறித்து அஸாம் மாநில தலைமைட் செயலாளர் கபிலன்தலைமையில் அதிகாரிகள் அவசர கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில், எந்தவித அசம்பாவித சூழ்நிலையையும் சமாளிக்க தயார் நிலையில்இருக்குமாறு மாநில அதிகாரிகளை உஷார் படுத்த முடிவு எடுக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து மாநிலம் முழுழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.திப்ரூகர் பகுதியில் 24 மணி நேர அவசர கால மையம் திறக்கப்பபட்டுள்ளது.
தீயணைப்பு நிலையங்கள் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்புப்படைகளும் தயார் நிலையில வைக்கப்பட்டுள்ளன. அஸாம் மக்களும் கடும்பீதிக்குள்ளாகி உள்ளனர். பலர் தங்களது குடும்பத்துடன் அருகாமயிைல் உள்ளமாநிலங்களுக்கு இடம் பெயரந்துள்ளனர். சாலைகளில் போக்குவரத்துவவெறிச்சோடிக் கிடக்கிறது.
அசாம் முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க மக்கள் ஆரவம்காட்டினர். தாங்கள் போட்ட மொத்தப் பணத்தையும் எடுக்கவும் வங்கிகளில் கூட்டம்அலை மோதியது. மக்களை சமாளிக்க முடியாமல் வங்கிகள் திணறின.
வேங்கடநாதன் சொல்லியுள்ள கணிப்பை அஸாம் மக்கள் முழுமையாகநம்புகின்றனர். அவரது எச்சரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாதுஎன்று பலரும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அசாம் முழுவதும் மயானஅமைதியும், பெரும் பதட்டமும் நிலவி வருகிறது.
மத்திய அரசு மறுப்பு:
ரிக்டராக ஆனால் வேங்கடநாதன் கூறுவது போல பூகம்பம் ஏற்பட வாய்ப்பில்லைஎனறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அஸாம் அமைச்சர்கள் ரிபுன்போரா, ஹிமந்தா பிஸ்வாஸ் ஆகியோர் கூறுகையில், அஸ்ஸாமில் பயங்கர பூகம்பம்ஏற்பட வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த கணிப்பை உறுதி செய்ய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. எனவே மக்கள்பதட்டமடைய வேண்டாம். இருப்பினும் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் அதிகாரிகள்முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எந்த நிலை ஏற்பட்டாலும் சமாளிக்கஅஸ்ஸாம் தயாராக இருக்கிறது என்று அவர்கள் கூறினர்.
இதுவரை பூகம்பம் இல்லை:
இன்று காலை 8.21 மணிக்கு பூகம்பம் ஏற்படும் என வேங்கடநாதன் கூறியிருந்தாலும்பிற்பகல் வரை அங்கு நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications