டெல்லி: -நிதி அமைச்சக கட்டடத்திலிருந்து குதித்து தமிழக என்ஜீனியர் தற்கொலை
டெல்லி:
தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு மிகுந்த நிதி அமைச்சக கட்டடத்தின் மாடியிலிருந்துகுதித்து தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் குணசேகரன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.
டெல்லியில் வடக்கு பிளாக் பகுதியில், பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர்ஆகியோரின் அலுலகங்கள் உள்ளன. மிகுந்த பாதுகாப்பு நிறைந்த் பகுதி இது.இங்குள்ள நிதி அமைச்சக அலுவலகத்திற்கு ஒரு வாலிபர் வந்தார். முதல் மாடிக்குச்சென்ற அவர் அங்கு நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கத்தின் அலுலவகம்எங்கே உள்ளது என்று தமிழில் கேட்டுள்ளார். அவர் தமிழில் கேட்டது அங்கிருந்தஅதிகாரிக்குப் புரியவில்லை.
பின்னர் அமைச்சரின் பெயரை உச்சரித்ததை வைத்து பழனிமாணிக்கத்தை அந்த நபர்கேட்பதை உணர்ந்த அதிகாரிஅவர் சென்னைக்கு போயுள்ளதாக தெரிவித்தார். பின்னர்அந்த வாலிபர் அங்கிருந்து கிளம்பினார்.
கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்தார். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அம்புலன்ஸ் மூலம் ராம் மனோகர்லோகியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தஇளைஞர் இறந்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் தர்மபுரி மாவட்டம ஓசூரைச்சேர்ந்தவர். பொறியாளரான அவரது பெயர் குணசேகரன். ஜி.இ. கேபிட்டல்நிறுவனத்தில் பணியாற்றி வந்த குணசேகரன், அந்த வேலையிலிருந்து விலகிவிட்டாராம். தற்போது வேலை இல்லாமல் இருந்து வந்தார்.
அமைச்சர் பழனி மாணிக்கத்திடம் உதவி கோரி அவர் வந்திருக்கலாம் என்றும், அவர்இல்லாததால் விரக்தியில் தற்கொலை முடிவை நாடியிருக்கலாம் எனறும் போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications