பதவி காலியாகிறது-சிக்கலில் டோனி பிளேர்
லண்டன்:
பதவியை விட்டு விரைவில் விலகுமாறு பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேருக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.கடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டனை ஆண்டு வரும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிளேர் அடுத்தஆண்டுக்குள் பதவி விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
2010ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை பதவியில் இருக்க பிளேருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உண்டு. ஆனால்,பிளேர் தலைமையில் கட்சி தேர்தலை சந்தித்தால் தோல்வி உறுதி என தொழிலாளர் கட்சியின் பெரும்பாலானஉறுப்பினர்கள் கருதுகின்றனர்.
மேலும் அமெரிக்காவுக்கு ஒரேயடியாக அடிபணிந்து இங்கிலாந்து நடந்து கொள்வதை தொழிலாளர் கட்சியினர்ஏற்கவில்லை. குறிப்பாக இராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய விவகாரங்களில் பிரிட்டன்தன்னிச்சையாக நடந்து கொள்ளாமல் அமெரிக்கா சொன்னபடி ஓவர் ஆட்டம் போட்டுவிட்டதாக அக் கட்சிஎம்பிக்களும் பொது மக்களும் கருதுகின்றனர்.
சமீப காலமாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் இதை உறுதி செய்துள்ளன. பிளேருக்கு ஆதரவு மடமடவெனசரிந்து வருகிறது.
![]() |
இதனால் பிளேர் விரைவிலேயே ராஜினாமா செய்துவிட்டு தனக்கு அடுத்தபடியாக பிரதமராகப் போகும் நபரைஅறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுத்து வருகிறது. பிளேரைத் தொடர்ந்து பிரதமராகும்நிலையில் அக் கட்சியின் முக்கிய தலைவரான கோர்டான் பிரெளன் உள்ளார்.
கட்சியில் அவருக்கு பெரும்பாலான எம்பிக்களின் ஆதரவு உள்ளது. இதையடுத்து அடுத்த நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்பே பிளேரை பதவி விலகச் செய்துவிட்டு பிரதமராகும் ஆசையில் வேகம் காட்டி வருகிறார்பிரெளன். இதனால் பிரெளன்-பிளேர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பிரெளனுக்கு ஆதரவான 8 துணை அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதோடு, பிளேர்உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
![]() |
இந் நிலையில் நேற்று பிரெளன்-பிளேர் இடையே சந்திப்பு நடந்தது. அதில் இருவரும் காரராசமாக பேசிக்கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன.
கட்சியிலும் மக்கள் மத்தியிலும் தனது செல்வாக்கு சரிந்துள்ளதாலும் நெருக்கடி அதிகரித்துள்ளதாலும் அடுத்த ஒருவருடத்துக்குள் பதவி விலகுவதாக பிளேர் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தொழிலாளர் கட்சியின் சார்பில் தனக்கு அடுத்தபடியாக யார் பிரதமர் பதவிக்கு நிறுத்தப்படுவார்என்பதை பிளேர் அறிவிக்கவில்லை.
இந் நிலையில் டெய்லி டெலிகிராப் நடத்திய கருத்துக் கணிப்பில் பிளேர் ஓராண்டுக்குள் ராஜினாமா செய்யவேண்டும் என 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர் கட்சியினரிடையே சேனல் 4 தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் 38 சதவீதம் பேர் பிளேர்உடனே விலக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications