மணல்: கோடிகளை சுருட்டும் திமுகவினர்-வைகே
கலிங்கப்பட்டி:
அதிமுகவுக்கும், மதிமுகவுக்கும் இடையே நெருடல் ஏற்படுத்தி, பிளவை உருவாக்க நினைக்கும் முதல்வர்கருணாநிதியின் எண்ணம் பலிக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கோவில்பட்டியில் நடந்த மதிமுக பிரமுகர் சின்ன முத்தையா இல்லத் திருமண விழாவில் வைகோ கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசுகையில், திமுக ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிக்க முடியாது. நீடிக்காது. விரைவில்சட்டசபைத் தேர்தல் வரும். அத்தேர்தலில் அதிமுக தலைமையிலான அணி அமோக வெற்றி பெறும்.அதிமுக, மதிமுக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த கருணாநிதி முயலுகிறார். இந்தக் கூட்டணி தமிழக மக்களின்நலனை கருத்தில் கொண்டு உருவான கூட்டணி. எனவே இக்கூட்டணி எதிர்காலத்திலும் தொடர்ந்து நீடிக்கும்.
ஜெயலலிதா விடுதலைப் புலிகளை எதிர்க்கிறார், வைகோ ஆதரிக்கிறார் என்று கருணாநிதி கேட்டுள்ளார். இதுவும்அதிமுக, மதிமுக இடையே நெருடலை ஏற்படுத்த முடியுமா என்ற கருணாநிதியின் எண்ணத்தின் வெளிப்பாடுதான். அனைத்து வழிகளிலும் அவர் முயலுகிறார். ஆனால் வெற்றிதான் கிடைக்காது, முயற்சி பலிக்காது.
டெல்லியிலே 50 ஆண்டுகளாக கட்சித் தோரணம், பேரணி எதுவும் நடைபெறாத வீதியில், ஈழத் தமிழர்களின்நலன் காக்க மதிமுக மேற்கொண்ட பேரணிக்கு டெல்லி காவல்துறை சிறப்பான பாதுகாப்பு அளித்தது. ஆனால்சென்னையில் நடந்த பேரணியின் போதும், ஆர்ப்பாட்டத்தின் போதும் விரல் விட்டு எண்ணக்கூடியஅளவுக்குத்தான் பாதுகாப்பு இருந்தது.
சமீபத்தில் நான் மதுரைக்கு விமானத்தில் சென்றபோது அதே விமானத்தில் பயணம் செய்த ஜெயலலிதாஎன்னுடன பேச வில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளனர் சிலர். உண்மை அதுவல்ல.
சிக்குன் குனியா நோய் குறித்து இருவரும் விவாதித்தோம். விமானத்திலிருந்து இறங்கிய போது,ஆண்டிப்பட்டியில் நடைபெறும் கூட்டம் வெற்றிகரமாக அமையட்டும் என்று வாழ்த்தி வழியனுப்பினேன் என்றார்வைகோ.
இதையடுத்து மதுரையில் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டதில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில்,
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு, மூன்று மாதத்திற்குள் நாடு முழுவதும் மணல் கொள்ளை நடக்கிறது.இக்கொள்ளையில் திமுக மாவட்ட நிர்வாகிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போன்றவர்கள்ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து வருகிறார்கள். ஒரு இடத்தில் பொதுமக்களே ஒன்றுதிரண்டு இதை கண்டித்து போராடி இருக்கிறார்கள்.
மணலை கடத்தி கோடி கோடியாக சேர்க்கலாம் என ஆட்சியாளர்கள் கருதும் அதே நேரத்தில் நம் கட்சிதோழர்கள் தன் சொந்த பணத்தை செலவழித்து இது போன்ற கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். எங்கள் கட்சிதோழர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.
நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது. மதிமுக இயக்கத்தை நம் போர் வீரர்கள் கட்டி காத்து வருகிறார்கள்.டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு எந்த கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த அனுமதி வழங்கப்படுவதுஇல்லை.
இப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும் இந்த இடத்தில் இலங்கையில், ஈழ தமிழர்கள் மற்றும் பச்சிளம்குழந்தைகளை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பதை கண்டித்து மதிமுக சார்பில் போராட்டம் நடத்த டெல்லிபோலீசில் அனுமதி வழங்கியது மட்டும் அல்லாமல் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற உதவிசெய்தார்கள்.
அந்த போராட்டத்தில் நான் உணர்ச்சி பூர்வமாக கோஷமிட்டதால் என் குரல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்எதிரொலியாக பார்க்காமல் இருந்தவர்கள் திரும்பி பார்க்கிறார்கள். கேட்காமல் இருந்தவர்கள் இப்போதுகேட்கிறார்கள். எனவே தற்போது உலகத்தின் பார்வை இலங்கை தமிழர் பிரச்சனை பக்கம் திரும்பியுள்ளது.
காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்குமா? என்ற நம்பிக்கை இல்லை. கேரளாவில் அச்சுதானந்தன்முதல்வரான போதே முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழ் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நியாயமானஉரிமையை தர மாட்டார்கள் என்று நினைத்தேன்.
அது போல தான் நடந்து வருகிறது. உச்சநீதி மன்றத்தினஅ தீர்ப்பையே மதிக்காமல் கேரள அரசு முல்லைபெரியாறு அணையையும், அதை சுற்றியுள்ள நிலங்களையும் கேரள நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்என்று அனைத்துக் கட்சியினர்களை பிரதமரிடம் அழைத்து மனு கொடுத்து இருக்கிறார்கள்.
இவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தும் தமிழக முதல்வர் எதிர்ப்பு குரல் கொடுக்காமல் இருக்கிறார். 1995ம்ஆண்தடு முடிந்து போன ஒப்பந்தத்திற்கு மறு ஒப்பந்தம் போட வேண்டும் என்று கேரளகாரர்கள் கூறுகிறார்கள்.அரசியல் ஆதாயம் தேடாத துறவிபோல வாழ்ந்து வரும் படி நெடுமாறன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துஇருக்கிறார்கள்.
வருங்கால சந்ததியினர், விவசாய பெருங்குடி மக்கள் முல்லை பெரியாறு அணை குறித்த விழிப்புணர்வைஏற்படுத்த மதிமுக சார்பில் முல்லை பெரியாறு உரிமை காக்கும் பேரணி மதுரையில் நடத்த இருக்கிறோம்.
இப்பேரணி வருகிற 19ம் தேதி நடத்தப்படும். இந்த பேரணியில் தென் மாவட்ட விவசாய பெருங்குடி மக்களும்,மதிமுகவினரும் திரளாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். இப்பேரணி எனது தலைமையில் நடைபெறும் இடம்பற்றி பின்னர் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு நாம் பாடுபடவேண்டும். உள்ளாட்சி தேர்தலிலும் நம் கூட்டணி தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications