ஜிப்மர் ஊழியர்கள் ஸ்டிரைக்-நோயாளிகள் அவஸ்தை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவனைக்கு சுயாட்சி அந்தஸ்து கொடுக்க மத்திய அரசுமுடிவு செய்துள்ளதை எதிர்த்து ஊழியர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஜவஹர்லால் நேரு மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தை (ஜிப்மர்) தன்னாட்சிஅதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்குஜிப்மர் ஊழியர்கள், மருத்துவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.இந் நிலையில் நேற்றுமுதல் ஜிப்மர் மருத்துவமனையின் சி மற்றும் டி பிரிவுஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இதனால் மருத்துவமனையின உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு முற்றிலும்இயங்காமல முடங்கியுள்ளது.
மருத்துவமனை நிர்வாகமும் முற்றிலும் முடங்கியுள்ளது. போராட்டம் காரணமாகமருத்துவமனையின் எந்தப் பிரிவும் இயங்கவில்லை. இதனால் நோயாளிகள் கடுமஅவதிக்குள்ளாகியுள்ளனர்.
சிகிச்சை பெற வரும் நோயாளிகள், வேலைநிறுத்தம் காரணமாக திருப்பிஅனுப்பப்பட்டு வருகின்றனர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை, மத்திய அரசு தனது முடிவை கைவிடும்வரை போராட்டம் தொடரும், வாபஸ் பெற மாட்டோம் என ஊழியர்கள்அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications