ஜெ. சவாலுக்கு கருணாநிதி பதில் சவால்
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கோப்புகள் அதிக அளவில்தேங்கிக் கிடந்ததை ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கத்தயார் என்று முதல்வர் கருணாநிதிபதில் சவால் விடுத்துள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் கோப்புகள் தேங்கிக்கிடந்ததாக கூறும் முதல்வர் கருணாநிதி,அதை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நிரூபிக்கத் தயாரா என்று ஜெயலலிதாகேட்டிருந்தார். அதற்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோப்புகள் தேங்கியதாக நான்கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அவர்கூறியபடி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மட்டுமல்ல, தமிழக மக்கள்,பத்திரிக்கையாளர்கள், படித்தவர்கள், அதிகாரிகள் முன்னிலையில் எனதுகுற்றச்சாட்டை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க நான் தயார்.
எனது குற்றச்சாட்டு பொய் என்று உறுதியானால் அந்தக் குழு கொடுக்கிறதண்டனையை ஏற்க நான் தயார். ஓய்வு பெற்ற அதிகாரிகளை பணியில்அமர்த்தியிருப்பதாக அநாகரீகமான குற்றச்சாட்டை ஜெயலலிதா கூறியுள்ளார்.
என்னிடம் பணியாற்றும் 5 செயலாளர்களில் ஒருவர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்நான்கு ஆண்டு காலம் வேண்டும் என்றே பழி வாங்கப்பட்டு ராமநாதபுரம்மாவட்டத்தில், பணியில் நியமிக்கப்பட்டிருந்தவர்.
மற்றொருவர் என்னிடம் 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுபவர். அதிமுகஆட்சிக்காலத்தில் 9 ஆண்டுகள் பணி நீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டவர்.
ஜெயலிலதா தனது ஆட்சிக் காலத்தில ஓய்வு பெற்ற டிஜிபி தேவாரம், அதிகாரிஜானகிராமன் ஆகியோரை பதவியில் அமர்த்தியிருந்தாரா இல்லையா? அது எந்தவகையில்?
பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதற்காக டிஜிபிரவீந்திரநாத் பணி நீக்கம் செய்யப்பட்டதாக ஜெயலலிதா கூறுகிறார். உண்மையிலேயேஅந்தத் தவறை அவர் செய்திருந்தால், பணி நீக்கம் செய்யப்பட்டு நான்குஆண்டுகளாக அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது தெரிய வில்லை.
உள்துறைச் செயலாளராக இருந்த சையத் முனீர் ஹோடாவை தற்காலிக பணி நீக்கம்செய்த உத்தரவை மத்திய அரசே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. ஜெயலலிதாஅரசால் ஹோடா துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டது குறித்து முசெளரியில் உள்ளஐ.ஏ.எஸ். பயிற்சிக் கழகத்தில் விவாதம் நடந்து வருகிறது.
திருவனந்தபுரத்தில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் நான் கலந்து கொள்ளாமல்நாகநாதனை அனுப்பியதாக இன்னொரு குற்றச்சாட்டு. அங்கு நடந்தது முதல்வர்கள்மாநாடே அல்ல. 11வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான வரைவு அணுகு முறைஆவணத்தை பரிசீலிப்பதற்கான வட்டாரக் கலந்தாய்வுக் கூட்டம் தான் அது.
இந்த மாநாடு ஜூலை 22ம் தேதி நடந்தது. அதே நாளன்று தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆகிய காரணத்தால் எனக்குபதில் தமிழக திட்டக்குழுத்துணைத் தலைவர் நாகநாதனை அனுப்பி வைத்தேன்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இது போல பல கூட்டங்கள் நடந்துள்ளன. ஆனால்அவரோ, நிதியமைச்சரோ யாரும் பங்கேற்றதே கிடையாது.
இந்தமாதம் ஐந்தாம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற முதல்மைச்சர் மாநட்டில்கலந்து கொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் ஜெயலலிதா. கடந்த 4ம் தேதிகுடியரசுத் தலைவர் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் பங்கேற்றநிகழ்ச்சிகளில் இரண்டில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. இதனால் தான்இக்கூட்டத்தில் கலந்து கொள்வில்லை.
2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்தமுதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை.
சிறுபான்மையோர் உரிமை நாள் கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசுக்குமத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. இதை கொண்டாட ரூ. 60,000 நிதி ஒதுக்கீடுசெய்யும்படி 2005ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி கோப்பு ஜெயலலிதாவுக்குஅனுப்பப்பட்டது.
ஓராண்டு காலம் அந்தக கோப்பு ஜெயலலிதா அலுவலகத்திலேயேகையெழுத்தாகாமல் இருந்தது. தற்போது செப்டம்பர் 6ம் தேதிதான் நான் அந்தக்கோப்பில் கையெழுத்திட்டேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications