ஜெயேந்திரரை கைது செய்த எஸ்பி சஸ்பெண்ட்
சென்னை:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கைவிசாரித்து வந்த தனிப்படை எஸ்.பி. பிரேம்குமார், அப்ரூவர் ரவிசுப்ரமணியத்தைசிறையிலிருந்து தப்பிக்க தூண்டியதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள கோவில் மேலாளராக இருந்து வந்த சங்கரராமன்கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவில் அலுவலகத்தில் படுகொலைசெய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் அதே ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி ஆந்திர மாநிலத்தில்வைத்து ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விஜயேந்திரர், அவரது தம்பிரகு, சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், காண்டிராக்டர்ரவி சுப்ரமணியம், கொலைகும்பலை ஏவிய அப்பு உள்ளிட்டோர் வரிசையாக கைது செய்யப்பட்டனர்.
இந்த கைதுகளை நடத்தி மிகவும் பரபரப்பான அதிகாரியானார் பிரேம் குமார்.சசிகலாவிடம் இவருக்கு நெருக்கம் அதிகம். இதனால் சங்கராச்சாரியார்கள் மீது இவர்தனிப்பட்ட வன்மத்துடன் பிரேம் குமார் செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன.
கைதானவர்களில் காண்டிராக்டர் ரவிசுப்ரமணியம் அப்ரூவராக மாறினார்.ஜெயேந்திரர், விஜயேந்திரர் குறித்தும், கொலை வழக்கு குறித்தும் அனைத்துஉண்மைகளையும் போலீஸாரிடம் வாக்குமூலமாக தெரிவித்தார்.
இதே வாக்குமூலத்தை கோர்ட்டிலும் அவர் தெரிவித்தார்.
அப்ரூவர் ஆன பின்னரும் கூட அவர் தொடர்ந்து காஞ்சிபுரம் கிளைச் சிறையில்தான்இருந்தார். அவரது பாதுகாப்பை உறுதி செய்யவே சிறையில் தொடர்ந்துவைத்திருந்தார் பிரேம் குமார். சிறையிலேயே சுடு தண்ணி, நல்ல உணவு எனகிட்டத்தட்ட லாட்ஜ் வாசம் போல ஜாலியாக இருந்தார் ரவி சுப்ரமணியம்.
இந்த கொலை வழக்கில் கைதுகளில் ஆரம்பித்து விசாரணை முடிவடைந்து காஞ்சிபுரம்மாஜிஸ்திரேட நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யும் வரை வழக்கைமுழுமையாக கையாண்டவர் பிரேம்குமார்தான்.
ஜெயேந்திரர் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவரிடமும் படு வித்தியாசமாகவிசாரணை மேற்கொண்டார் பிரேம்குமார். மேலும் சங்கர மடத்தின் பெயரை டேமேஜ்செய்ய உஷா, சொர்ணமால்யா என பெண் தொடர்புகள் குறித்து கதையைகிளப்பினார்.
மேலும் எழுத்தாளர் அனுராதா ரமணன் மூலமாக ஒரு பரபரப்பு அறிக்கை வந்ததற்கும்பிரேமே காரணம் என்று கூறப்பட்டது.
ஜெயேந்திரரிடம் நடத்திய விசாரணையை வீடியோ எடுத்து அதை பத்திரிக்கைகள்,டிவிக்கு கொடுத்து பரபரப்பை உருவாக்கினார். ரவி சுப்ரமணியத்தைஅப்ரூவர்ஆக்கியதும் பிரேம்குமார்தான்.
இதற்கிடையே திமுக ஆட்சிக்கு வந்ததும் பிரேம்குமார் உப்புச் சப்பில்லாத இல்லாதகும்பகோணம் போக்குவரத்துத்துறை ஊழல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளராகமாற்றப்பட்டார்.
இந் நிலையில் இப்போது அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது தமிழக அரசு.
ரவி சுப்ரமணியம் தற்போது உடல் நலக்குறைவால் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பிரேம்குமார் அடிக்கடி சென்றுபார்த்து வந்துள்ளார்.
இதை தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு கண்காணித்து வந்தது.
இந்த வழக்கில் இப்போது கொஞ்சமும் சம்பந்தமில்லாத பிரேம் எதற்காக ரவிசுப்ரமணியத்தை அடிக்கடி வந்து பார்ககிறார்என்று விசாரிக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் இருந்த வரை சிறையை விட்டு நீ எப்போது வேண்டுமானாலும்வெளியில் வரச் செய்திருப்போம். ஆனால், இப்போது உன்னை வெளியிலேயேவிடாமல் போட்டு அடைத்து வைக்க முடிவு செய்துவிட்டார்கள்.
இதனால் சிறையிலேயே இருந்தால் வழக்கு முடியும் வரை வெளியே வர முடியாது.எனவே இங்கிருந்து தப்பித்து விடு என்று ரவி சுப்பிரமணியத்துக்கு பிரேம் குமார்அறிவுறுத்தியது தெரிய வந்தது.
மேலும், தனது கட்டுப்பாட்டில் விசாரணை இருந்தபோது, ரவிசுப்ரமணியத்தை சிறைவிதிகளுக்கு முரணாக, கோவில்உள்பட பல இடங்களுக்கு போலீஸ் வேனில் ஜாலியாக சென்று வர பிரேம்குமார்அனுமதித்துள்ளார்.
பிரேம்குமார் மீதான இந்தப் புகார்கள் குறித்து சிபிசிஐடி விசாரிதது வந்தது.விசாரணையில் அனைத்தும் உண்மை எனத் தெரிய வந்ததால், அவர் தற்போதுசஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications