தமிழக கோவில்கள்-மசூதிகளுக்கு தீவிர பாதுகாப்பு
சென்னை:
மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகத்தில்கோவில்கள், மசூதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நேற்று பிற்பகல் மசூதி அருகிலும்,மார்க்கெட்டிலும் 3 குண்டுகள் வெடித்தன. இதில் 47 பேர் உடல் சிதறி பலியானார்கள்.200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மதக் கலவரம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை நகரில் நேற்று இரவு முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.மாலை முதலே இந்த நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள்,கோவில்கள், மசூதிகள், தர்ஹாக்கள், முக்கிய கட்டடங்கள், மக்கள் அதிகம் கூடும்இடங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் போலீஸார்குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நகரில் உள்ள விடுதிகள், லாட்ஜுகளிலும் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.சந்தேகப்படும்படியான நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மறு அறிவிப்பு வரும் வரை இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் எனகாவல்துறை அறிவித்துள்ளது.
இதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களது காவல் நிலைய எல்லைக்குள்வரும் வழிபாட்டுத் தலங்கள், முக்கிய இடங்கள், கட்டடங்கள், சந்தைகள், பேருந்துநிலையங்கள், விமான நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பையும், தீவிர ரோந்துமற்றும் கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபிமுகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications