புலிகள் திடீர் தாக்குதல்: 26 ராணுவ வீரர்கள் பலி-கிளிநொச்சியில் மின், டெலிபோன் இணைப்பு துண்டிப்பு!
கொழும்பு:
யாழ்ப்பாணம் அருகே முகமலை என்ற இடத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய ஆவேசத் தாக்குதலில் 26 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் திரிகோணமலை அருகே உள்ள சம்பூர் பகுதியை சிலநாட்களுக்கு முன்புராணுவம் மீட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போர் சற்றே ஓயந்தது. ஆனால் இதற்குராணுவம் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என விடுதலைப் புலிகள் எச்சரித்திருந்தனர்.அத்தோடு, சம்பூரைச் சுற்றிலும் ஆங்காங்கே சிறிய அளவிலான மோதல்கள் நீடித்து வருகின்றன. இந்த நிலையில்யாழ்ப்பாணம் அருகே முகமலை என்ற இடத்தில் ராணுவத்தின் நிலைகள் மீது புலிகள் திடீர் தாக்குதலை மேற்கொண்டனர்.
பீரங்கிகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்கதுல் நடந்தது. பதிலுக்கு விமானங்கள் மூலம், பீரங்கிகளைக் கொண்டும்ராணுவம் தாக்கியது. கடுமையாக நடந்த இந்த சண்டையில் ராணுவத் தரப்பில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
26 ராணுவ வீரர்கள் இதில் கொல்லப்பட்டனர். 53 பேர் படுகாயமடைந்தனர். விடுதலைப் புலிகள் தரப்பில் 4 பேர்இறந்ததாக கூறப்படுகிறது. முகமலை தவிர நாகர்கோவில், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும் ராணுவம்தாக்குதல் நடத்தி வருகிறது. இப்பகுதிகளை புலிகளிடமிருந்து மீட்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால் விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல் ஆவேசமாக இருந்ததால் ராணுவத்தால் முன்னேறமுடியவில்லை. இதனால் பல இடங்களில் ராணுவம் மீண்டும் நிலைக்கு திரும்பியது.
இதேபோல வவுனியா, யாழ்ப்பாணத்தை பிரிக்கும் யானையிரவு பகுதியையும் பிடிக்க ராணுவம் முன்னேறியது.ஆனால் இங்கும் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை தொடுத்ததால் ராணுவத்தின் முயற்சிகள்பலனளிக்கவில்லை.
கிளிநொச்சி பகுதியில் கடும் தாக்குதலை தொடுக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. தொடர்பான செய்திகள்னோட்டமாக அங்குமின்சார இணைப்பு , தொலைபேசி இணைப்புகளை ராணுவம் துண்டித்துள்ளது. இதனால் கிளிநொச்சி இருளில்மூழ்கியது.
விஷ வாயு தாக்கி 87 மாணவ, மாணவியர் மயக்கம்:
இதற்கிடையே மட்டக்களப்பு மாவட்டம் உப்பாடை பகுதியில் உள்ள விவேகானந்தா பெண்கள் பள்ளிக் கூடத்தில்திடீரென விஷ வாயு பரவியது. இதை நுகர்ந்த மாணவ, மாணவியர்கள் மயங்கி விழுந்தனர்.
அவர்களை மீட்டு முதலுதவி செய்ய வந்த ஆசிரியைகளுக்கும் விஷ வாயு தாக்கி மயக்கம் ஏற்பட்டது. மொத்தம்86 பேர் மயக்கம் போட்டதால் அங்கு பரபரபபு ஏற்பட்டது.
உடனடியாக அனைவரும் பத்திரமாக மீட்கப்படடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக கூடத்திற்குஅருகே வசிக்கும் விவசாயி ஒருவர் தனதுதென்னை மரங்களுக்கு கருவண்டு தாக்குதலை தடுக்க பூச்சி மருந்துதெளித்துள்ளார். இது பள்ளிக் கூடத்திற்குப் பரவியதால் தான் அதை சுவாசித்தவர்கள் மயங்கி விழுந்ததாககூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications