வங்கதேச தீவிரவாதிகள் முகாம்களை இந்தியா தாக்காது: பிரணாப்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
வங்கதேசத்தில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை இந்தியா தாக்காது என்று மத்தியபாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.கொல்கத்தாவில் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,வங்கதேசத்தில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை இந்தியா தாக்கி அழிக்கும் திட்டம்இல்லை. அடுத்த நாட்டுக்குள் எபப்டி நாம் புகுந்து தாக்குதல் நடத்த முடியும்?
மாறாக, தீவிரவாதிகள் முகாம்களை அழித்து, தீவிரவாதிகளை கட்டுப்படுத்துமாறுவங்கதேச அரசை கண்டிப்புடன் கேட்டுக் கொள்வோம். இது தொடர்பாக வங்கதேசத்தை தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்வோம் என்றார் முகர்ஜி.












Click it and Unblock the Notifications