பிரேசிலில் மன்மோகன்-15ம் தேதி க்யூபா பயணம்
டெல்லி:
இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டமைப்பின் முதல்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் பிரேசில் சென்றுள்ளார்.
இக் கூட்டத்துக்குப் பின் அணி சேரா நாடுகள் மாநாட்டில் பங்கேற்க க்யூபா செல்கிறார் பிரதமர். பிரேசில் செல்லும்வழியில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் ஓய்வெடுத்தார்.இன்று பிரேசில் சென்றடையும் பிரதமர் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூடா டிசில்வா மற்றும் தென்ஆப்பிரிக்க தலைவர்களுடன் பேச்சு நடத்துகிறார். இதைத் தொடர்ந்து இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்காஇடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
கடந்த 1968ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்குப் பிறகு பிரேசில் செல்லும் முதல் பிரதமர்மன்மோகன் சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து க்யூபா செல்லும் பிரதமர் ஹவானாவில் நடக்கும் 14வது அணி சேரா நாடுகளின் மாநாட்டில்பங்கேற்கிறார். இக் கூட்டத்தில் 116 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
ஹவானாவில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பையும் தனியே சந்தித்து பிரமதர் பேச்சு நடத்தவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications