பிற்பட்டவர்களில் கிரீமி லேயருக்கு இட ஒதுக்கீடுகூடாது-தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
பிற்படுத்தப்பட்டவர்களில் வசதியானவர்களுக்கு (கிரீமி லேயர்) இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என தமிழகஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வசதியானவர்களை அடையாளம் கண்டு அவர்களை பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு பட்டியலில்இருந்து நீக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசை எதிர்த்து வாய்ஸ் என்ற ஒரு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடுத்திருந்தது. தனது மனுவில்,
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்து இந்திரா சகானே தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும்போது,
அவர்களில் பொருளாதார, சமூக, கல்விரீதியில் மேம்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன் போகக் கூடாதுஎன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களை இட ஒதுக்கீட்டில் இருந்து 6 மாதத்துக்குள் நீக்க வேண்டும் எனஅனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், அந்தத் தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. எனவே பிற்படுத்தப்பட்டவர்களில் கிரீமி லேயர்என்றழைக்கப்படும் பொருளாதாரத்தில் முன்தங்கியவர்களை இட ஒதுக்கீட்டில் இருந்து நீக்க உத்தரக விடவேண்டும்.
இவ்வாறு வாய்ஸ் அமைப்பு தனது மனுவில் கூறியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாத்தூர், கபீர் ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்,
பொருளாதார, சமூக, கல்விரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களை முன்னேன்றத் தான் இட ஒதுக்கீடே கொண்டுவரப்பட்டது. அதனால் வசதி படைத்தவர்கள் இந்த இட ஒதுக்கீடு பட்டியலில் வருவது சரியல்ல என்றனர்.
மேலும் இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என மண்டல் கமிஷன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்தது நினைவுகூறத்தக்கது. ஆனால், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து அமலில் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications