விமான நிலையத்தில் பொக்கே ஏற்படுத்திய பீதி
சென்னை:
தமிழக ஆளுனர் பர்னாலா செல்லவிருந்த டெல்லி விமானம் புறப்படும் சமயம்,சென்னை விமான நிலையத்தில், கேட்பாரின்றி கிடந்த பூங்கொத்து (பொக்கே) பெரும்பீதியை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலையத்தின் காமராஜர் உள்நாட்டு முனையத்தில், விமானத்தில்ஏறுவோர் செல்லும் பகுதியில் ஒரு கூடையில் பூங்கொத்து கிடந்தது. கேட்பாரின்றிநீண்ட நேரம் அது கிடந்ததால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்று பீதி ஏற்பட்டது.இதையடுத்து விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரும்,வெடிகுண்டுநபுணரக்ளும் மோப்ப நாய்களுடன விரைந்து வந்து அந்த பூங்கொத்தைசோதனையிட்டனர். ஆனால் அதில் குண்டு ஏதுமில்லை.
போதையில் விமானத்துக்குள் ஓடிய பயணி:
இதற்கிடையே துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், குடிபோதையில் அங்கும் இங்கும் ஓடி ரகளை செய்த போடிநாயக்கனூரைச் சேர்ந்த பயணியைபோலீஸார் கைது செய்து கீழே இறக்கினர்.
துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் நிறுவனம் வந்து கொண்டிருந்தது. விமானம் சென்னையை நெருங்கியபோது அதில் பயணித்துக்கொண்டிருந்த தனசேகரன்என்ற 45 வயது பயணி திடீரென எழுந்து விமானத்துக்குள் ஓட ஆரம்பித்தார்.
குடிபோதையில் இருந்த அவர் சீட் பெல்ட்டை அணியவும் மறுத்தும், உட்கார மறுத்தும் ரகளை செய்தார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சக பயணிகளும், விமான ஊழியர்களும் சிரமப்பட்டு அவரை அமுக்கிப் பிடித்து உட்கார வைத்து பெல்ட்டை போட்டு கட்டினர்.
விமானம் தரையிறங்கியதும் அந்த நபரை போலீஸாரிடம் விமான ஊழியர்கள் ஒப்படைத்தனர். போலீஸார் தனசேகரனை கைது செய்தனர். தனசேகரன்தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். துபாயில் கூலி வேலை பார்த்து வருகிறார். ஊருக்குத் திரும்பும் சந்தோஷத்தில் மப்பு ஏற்றிக்கொண்டு விமானத்தில் ஆட்டம் போட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தனசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications