அண்ணா பல்கலை துணை வேந்தர் வீட்டில் மர்ம தீ: வெடிகுண்டு வீச்சா?
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதனின் அரசு இல்லத்தில்நள்ளிரவில் பலத்த குண்டு சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று நள்ளிரவு 1 மணியளவிலவெடிச் சத்தம் கேட்டது. சமையல் அறை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.இதையடுத்து வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலரும்துணைவேந்தரின் குடும்பத்தினரும் உடனடியாக தீயை அணைக்கும் பணியில்ஈடுபட்டனர்.தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தீயில் சமையலறைக்கதவு, சாப்பிடும் அறை, பூஜை அறை ஆகியவற்றின் கதவுகள் எரிந்து போய்விட்டன.
ரெப்ரிஜிரேட்டரும் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது. கண்ணாடிக் கதவுகள்சிதறியுள்ளன. காஸ் சிலிண்டர் மட்டும் வெடிக்கவில்லை. இந்த சம்பவத்தால ஏற்பட்டசேத மதிப்பு ரூ. 5 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
குண்டு சத்தத்தோடு தீ ஏற்பட்டதை காவலாளி உடனே உணர்ந்து துணை வேந்தர்குடும்பத்தினரை எழுப்பியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இது தீ விபத்து அல்ல என்றும், துணைவேந்தரை கொலை செய்யும்நோக்குடன் அல்லது மிரட்டும் நோக்கத்தில் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்று எனகூறப்படுகிறது.
இச் சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழகத்திலும் அதன் கட்டுபாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலும்செல்போனுக்குத் தடை, ஆபாச உடைகளுக்குத் தடை என்று பல்வேறு சீர்திருத்தநடவடிக்கைகளில் துணைவேந்தர் விஸ்வநாதன் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால்அதிருப்தி அடைந்த யாரேனும் வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டைவீசினார்களா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு நிபுணர்களும் வந்து சோதனை நடத்தியதில் குண்டு வெடித்தற்கானதடயம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர். கேஸ் கசிவாலோ அல்லது மின்சாரகசிவாலோ தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால், சிலிண்டெர் வெடிக்காமல் பத்திரமாக உள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
