இலங்கை அரசு-புலிகளுக்கு பிரதமர் அட்வைஸ்
பிரேசிலியா:
இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என பிரதமர்மன்மோகன் சிங் கூறினார்.
இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டமைப்பின் முதல் கூட்டத்தில்பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் பிரேசில் போய்ச் சேர்ந்தார்.முன்னதாக பிரேசில் செல்லும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிங்,
இலங்கை விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண அந் நாட்டு அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.நார்வேயுடனும் பேசி வருகிறோம். முதலில் புலிகளும் இலங்கை அரசும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைமுழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
அதன் பிறகு தான் இதில் அடுத்த கட்டத்துக்கே போக முடியும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாற்காலிக உறுப்பு நாடாக வெனிசுவேலாவும் கெளதமாலாவும் இந்தியாவின்ஆதரவை கோரியுள்ளன. இதில் எந்த முடிவையும் இந்தியா இன்னும் எடுக்கவில்லை.
சமீப காலமாக நடந்து வரும் போர் விமான விபத்துக்களால் இந்திய விமானப் படையின் பலம்குறைந்துவிட்டதாகக் கூறப்படுவது தவறு. அதே நேரத்தில் இந்த விபத்துக்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது.
நமது அண்டை நாடுகளுக்கு இணையாக நமது விமானப் படையின் பலத்தை கூட்ட வேண்டியது அவசியம்.அதை செய்து வருகிறோம்.
பிரேசில், கியூபா பயணங்களை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் புதிய வெளியுறவுத்துறை அமைச்சரைநியமிக்க உள்ளேன்.
கியூபாவில் நடக்கும் அணி சேரா நாடுகள் கூட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபை நிச்சயமாகசந்தித்துப் பேசுவேன் (இதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது). தீவிரவாதிகளை ஒடுக்க மேலும் தீவிரநடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் கோருவேன் என்றார் மன்மோகன்.
இதையடுத்து பிரேசில் தலைநகர் பிரேசிலியாவை அடைந்த பிரதமருக்கு மிகச் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.
அதே போல தென் ஆப்பரிக்க அதிபர் தாபோ மெக்கியும் பிரேசில் வந்து சேர்ந்துள்ளார்.
இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு 14ம் தேதி கியூபா செல்லும் பிரதமர் 18ம் தேதி நாடு திரும்புவார்.


Click it and Unblock the Notifications
