ஏமன் நாட்டில் கூட்ட நெரிசலில் 51 பேர் பலி
இப்:
ஏமன் நாட்டில் தேர்தல் கூட்ட நெரிசலில் சிக்கி 51 பேர் பலியாயினர். 238 பேர் படுகாயமடைந்தனர்.
ஏமன் நாட்டின் இப் என்ற நகரில் தேர்தலையொட்டி பிரமாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அங்குள்ள ஸ்டேடியத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜனாதிபதி அலி அப்துல்லா சலே இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசி முடித்து விட்டு சென்றவுடன் ஸ்டேடியத்தில் கூடியிருந்தவர்கள் வேக வேகமாக வெளியேறினர்.அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெரும் அமளி துமளி நிலவியது.
இதில் நெரிசலில் சிக்கி மிதிபட்டு 51 பேர் பரிதாபமாக இறந்தனர். 238 பேர் படுகாயமடைந்தனர். ஸ்டேடியத்தில்கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் கூடியதே இந்த நெரிசலுக்கு முக்கிய காரணம். மொததம் 1,50,000 பேர்ஸ்டேடியத்தின் உள்ளேயும், வெளியேயும் கூடியிருந்தனர். இதுதவிர ஸ்டேடியத்தை சுற்றியுள்ள தெருக்களிலும்பெருமளவு மக்கள் கூடியிருந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுககு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்கள் குடும்பம் மற்றும்காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும் என ஜனாதிபதி சலே அறிவித்துள்ளார். அவர்களுக்குமாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20ம் தேதி ஏமன் நாட்டில் ஜனாதிபதி மற்றும் ஊராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.மிகவும் ஏழை நாடான ஏமனில் சலேதான் நீண்ட காலமாக ஜனாதிபதியாக இருந்து வருகிறார். வரும் தேர்தலிலும்அவரே வெற்றிபெறுவார் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications