திமுகவினருக்கு மட்டுமே டிவி-நிலம்: ஜெ
சென்னை:
திமுகவினருக்கு மட்டுமே 2 எக்கர் நிலமும், கலர் டிவியும் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,பேறிஞர் அண்ணாவில் பிறந்த நாள், முத்தமிழ் தந்த மொழிப்பற்றாளன் பிறந்த நாள், கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு என்ற தாரக மந்திரம் தந்த பகுத்தறிவாளர் பிறந்த நாள், மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடுஎன்று பெயர் மாற்றம் செய்த தமிழ் உணர்வாளன் பிறந்த நாள், அண்ணாவின் சிறப்பு தான் என்ன?
1967ம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய சட்டபேரவையில் போர்க்களத்தில் அண்ணாவின் தலைமையில்போட்டியிட்ட கழகம் மிகப் பெரிய வெற்றிக்கண்டு ஆட்சியைப் பிடித்தது. எனக்கு சேர வேண்டும் என்றுநினைக்கிற அனைத்து புகழும் எம்ஜிஆரை மட்டும் தான் சாரும். எனவே நீங்கள் அனைவரும் ராமாவரம்தோட்டத்திற்குச் சென்று உங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைச் சொன்னால் எனது கடமையில் நான் உயர்ந்துநிற்பேன் என்றார் அண்ணா.
எங்கும் கருணாநிதி, எதிலும் கருணாநிதி என்று தன்னை முன்னிலைப்படுத்திடும் போக்கைக் கண்டித்து,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கினார் புரட்சிதலைவர் எம்ஜிஆர். அண்ணாசாதிக்க நினைத்தவற்றை தனது வாழ்நாள் பணியாகவும், ஆட்சிப் பணியாகவும் கொண்ட புரட்சித் தலைவரதுஆட்சியை ஊழல் புகார் கூறி வீழ்த்திட கருணாநிதி முயன்றார். எந்த புகாரும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
11 ஆண்டுகள் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் ஆட்சி நிலை பெற்றது. புரட்சித் தலைவரை வீழ்த்த என்னென்னஉத்திகளைப் பயன்படுத்தினாரோ அதே உத்திகளைப் பயன்படுத்தி என்னையும் வீழ்த்த முயன்றார்.கருணாநிதியின் இடையூறுகளால் நமது நோக்கம், நமது வெற்றி அன்றும் இன்றும் சிதையவில்லை.
1991ல் மக்களின் ஏகோபித்த ஆதரவாலும், உங்களது அன்பாலும் ஆட்சி பீடம் ஏறினேன். கழக ஆட்சியின்சாதனைகளை நமது எதிரியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சுனாமி பயங்கரத்தில் நாம் ஆற்றிய அரும்பணிகளை உலகமே பாராட்டியது, வியந்து, மற்ற நாடுகளால் முடியாதவற்றை நாம் மூன்றே மாதங்களில் சாதித்துஇயல்பு நிலைக்கு கொண்டு வந்தோமே.
ஆனால் எதிரிகள் நமது வெற்றிப் பயணத்தை இப்போது தடுத்திருக்கிறார்கள். இது நிரந்தரமில்லை. இந்த தடுப்புச்சுவற்றைத் தூள்தூளாக்கி வென்று காட்ட வேண்டும். காட்டுவோம். இது நம்மால் முடியும். அவர்களது வெற்றிஅது பொய்யான வாக்குறுதிகளால் உருவானது. இது நீண்ட காலம் காப்பாற்றாது. வார்த்தை ஜாலங்கள்எப்போதும் வாழ்க்கைக்குத் துணைவராது.
அவர்களது வெற்றி தற்காலிகமானது. 2 ஏக்கர் நிலம் என்பதோ, ஒவ்வொரு வீட்டிற்கும் கலர் டிவி என்பதோசாத்தியமல்ல என்று தெரிந்தும், அறிவித்ததற்காக அவர்களது கட்சியினருக்கு மட்டுமே பட்டியல் தயாரித்துவழங்கப் போகிறார்களாம். பெயருக்கு வேலையற்றோருக்கு உதவிப்பணம் என்பார்கள், கேஸ் அடுப்புஎன்பார்கள், எல்லாமே அவர்களது கட்சி உறுப்பினர்கள் பெயருக்குத்தான்.
மக்ககளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினோம் என்று பொய்யுரைப்பர். நாம் இந்த பிரசாரத்தைமுறியடித்தாக வேண்டும். வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு, திண்ணைப் பிரசாரம் போல நமது பிரசாரத்தைமுடுக்கிவிட வேண்டும்.
இந்தப் பணியில் ஈடுபடும் போது, பொறுத்துக்கொள்ள முடியாத நமது அரசியல் எதிரிகள் வன்முறை ஆயுதத்தைகையிலெடுப்பார்கள். நம்மை தடுப்பார்கள் இந்த செயலுக்கு காவல் துறையினரையும் துணைக்கு அழைத்துக்கொள்வார்கள்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அநீதியை எதிர்ப்பதில் நாம் எப்போதுமே மக்கள் பக்கம்,மக்களோ நம் பக்கம் அவர்கள் எப்போதும் பயங்கரவாத்துக்கும், தீவிரவாதத்துக்கும் எதிராகவே இருக்கிறார்கள்.
இந்த தடவை ஆட்சி மாற்றம் என்பது, ஆண்டுகணக்கில் தள்ளிப் போடப்படாது. வெகு விரைவிலேயே அந்தஅற்புதம் நிகழப்போகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications