கூட்டணி வேணுமா?: ஜெ. மன்னிப்பு கேட்கட்டும்-கார்த்திக்
சென்னை:
கடந்த காலங்களில் நடந்து கொண்ட முறைக்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மன்னிபபு கேட்டால்அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலிப்பேன் என்று தமிழக பார்வர்ட் பிளாக் தலைவரும்,நடிகருமான கார்த்திக் கூறியுள்ளார்.
சமீபத்தில் நெல்லையில் நடந்த பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கார்த்திக் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில்ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன், மதுரை ஆதீனம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியின் முடிவில் கார்த்திக்குடன், நடராஜனும், ஆதீனமும் ஆலோசனை நடத்தினர்.மேலும், முக்குலத்தோர் சமூக பிரமுகர்கள் பலரும் கார்த்திக்கை சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி வைக்குமாறுவற்புறுத்தினர்.
எனவே உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கார்த்திக் கூட்டணி வைப்பார் என்று கூறப்பட்டது. அதற்குதற்போது பதில் அளித்துள்ளார் கார்த்திக்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தின் போது போயஸ்கார்டனில் கூட்டணி பேசச் சென்ற அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் பிஸ்வாசுக்கும் எனக்கும் நடந்தஅவமரியாதை எனது மனதிலிருந்து இன்னும் மறையவில்லை. (அங்கு பிஸ்வாஸையும் கார்த்திக்கையும் நிற்கவைத்து பேசிய ஜெயலலிதா, சந்தானத்தையும் கட்சியில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறுஎன்று மிரட்டி அனுப்பியதாகக் கூறப்படுகிறது)
எனவே வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் எங்களுக்கு இதுவரைஇல்லை. ஒருவேளை அதிமுக எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பினால், கடந்த காலங்களில் நடந்துகொண்ட முறைக்காக மன்னிப்பு கேட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எனக்கு கடிதம் எழுதினால்அதுகுறித்து நான் கட்சி தலைமைக்கு எடுத்துச் சொல்லி கூட்டணிக்கு பரிந்துரைப்பேன்.
பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் நான் கலந்து கொண்டது எந்தவித அரசியல் உள்நோக்கத்திற்காகவும் அல்ல.நடராஜனும், திருநாவுக்கரசர் எம்.பியும் வற்புறுத்தி அழைத்ததால் தான் நான் அந்த விழாவில் கலந்துகொண்டேன் என்று கூறியுள்ளார் கார்த்திக்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications