ராக்கெட் லாஞ்சர் தொழிற்சாலைகள் கண்டுபிடிப்பு
சென்னை:
சென்னை புறநகர்ப்பகுதிகளில் ரகசியமாக இயங்கி வந்த 8 ராக்கெட் லாஞ்சர் தயாரிப்பு தொழிற்சாலைகளைபோலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியும்அவரது மனைவியும் தலைமறைவாகிவிட்டனர்.
சமீபத்தில் சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு சென்ற லாரியில், ராக்கெட் லாஞ்சர்கள் நூற்றுக்கணக்கில் பதுக்கிவரப்பட்டதை ஆந்திர போலீஸார் கண்டுபிடித்தனர். நக்சலைட்டுக்களுக்காக இந்த லாஞ்சர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து சென்னை வந்த ஆந்திர போலீஸார் தமிழக போலீஸாரின் உதவியுடன் தீவிர விசாரணையில்இறங்கினர். இதில் அம்பத்தூர் பகுதியில் தான் இந்த ராக்கெட் லாஞ்சர்கள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது(முன்னதாக தமிழக டிஜிபி. முகர்ஜி இதை மறுத்தது குறிப்பிடத்தக்கது).
இதையடுத்து அந்த தொழிற்சாலைகளை கண்டுபிடிப்பதற்காக அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் போலீசார் தீவிர விசாரணை மற்றும் சோதனை நடத்திவந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு புதிய திருப்பம் ஏற்பட்டது. ராக்கெட் லாஞ்சர்களை தயாரிக்கும் 8 ரகசியஆயுதத் தொழிற்சாலைகளை போலீஸார் கண்டுபிடித்தனர். அம்பத்தூர், மண்ணூர்பேட்டை, கொரட்டூர், பெரியார்நகர், முகப்பேர் உள்ளிட்ட எட்டு இடங்களில் இந்த தொழிற்சாலைகள் உள்ளன.
இதில் பாரத் பைல்ஸ் என்ற நிறுவனத்தில் ஆந்திராவில் பிடிபட்ட ராக்கெட் லாஞ்சர்களின் உதிரி பாகங்களைப்போன்ற உதிரி பாகங்கள் ஏராளமாக இருந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். சோதனையின்இறுதியில் 14 பேரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களின் வீடுகளிலும் போலீஸ்சோதனை நடந்தது.
இதற்கிடையே, ராக்கெட் லாஞ்சர்களை கடத்தியதாக தேடப்படும் சீனிவாசரெட்டியின் உண்மையான பெயர் ரகுஎன்று தெரிய வந்துள்ளது. அம்பத்தூர் கோபல்சாமி நகரில் இந்த ரகு வசித்து வருகிறார் என்பதையும் போலீஸார்கண்டு பிடித்துள்ளனர்.
ராக்கெட் லாஞ்சர் விவகாரத்தில் போலீஸார் முக்கிய கட்டத்தை எட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் இன்று தமிழக டிஜிபி முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அம்பத்தூரில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ராக்கெட் லாஞ்சர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக கீயூ பிராஞ்ச்போலீஸார் 6 தனிப்படைகளை அமைத்து விசாரணையில் இறங்கினர்.
இதில் சென்னை பாடியில் உள்ள எவரெஸ்ட என்ஜினீயரிங் கம்பெணி, கொரட்டூரில் உள்ள ஜெய்டெக் கம்பெனி,தனலட்சுமி பவுண்டரி கம்பெனி, யூனிவர்சல் கம்பெணி, பாரத் பைன் என்ஜினீயரிங் ஆகிய 7 கம்பெனிகளிடம்ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவாஜி, குமார், ரமேஷ், அருணாச்சலம், முத்துசாமி, அண்ணாமலை, வீரபத்தரராவ் ஆகிய 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராக்கெட் லாஞ்சர்களை கடத்திய ரகு மற்றும் அவரது மனைவி சுதாராணி ஆகியோரை தேடி வருகிறோம். 2002ம்ஆண்டில் ரகு ஆந்திராவில் இருந்து வந்து அம்பத்தூர் பகுதியில் உள்ள கம்பெனிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளார். 2003ம் ஆண்டில் இருந்து கடந்த மே மாதம் வரை ராக்கெட்கள், ராக்கெட் லாஞ்சர்கள் தாயர்செய்து ஆந்திராவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கான வரை படங்கள் மற்றும் மாதிரிகளையும் அந்த தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு ரகுகொடுத்துள்ளார். கைதானவர்களின் பட்டறைகள் மற்றும் வீடுகளில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியதில்இந்த ஆதாரங்கள் சிக்கின.
சீனிவாச ரெட்டி என்ற பெயரில் கிராந்தி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் இருந்து ராக்கெட் குண்டுகள்,லாஞ்சர்களை அனுப்பியது ரகுதான் என்பது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. ரகுவும், அவரது மனைவிசுதாராணியும், அம்பத்தூர் கோபல்சாமி நகரில் தங்கி இருந்துள்ளனர்.
கடந்த 9ம் தேதி அன்று இவர்கள் அனைத்து பொருட்களையும் வீட்டில் விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர் எனஅவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications