மழையால் வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், சச்சின்டெண்டுல்கர் அபார சதம் அடித்தும் கூட, மழை குறுக்கிட்டதால், மேற்கு இந்தியதீவுகள் அணி டக்வொர்த்தி லூயிஸ் விதிப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மலேசியாவில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள்அணிகளுக்கிடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதலாவதுபோட்டியில் ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்திய அணியை வீழ்த்தியது.இரண்டாவது போட்டி நேற்று இந்திய, மேற்கு இந்திய அணிகளுக்கிடையே நடந்தது.முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.
தோள்பட்டை காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த சச்சின்தொடக்க ஆட்டக்காரரா களம் இறங்கி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில்அபாரமான சதத்தை போட்டார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் 141 ரன்களைக் குவித்த சச்சின் டெண்டுல்கர் இந்தியஅணி 5 விக்கெட் இழப்புக்கு 309 ரன்களை சேர்க்க பேருதவியாக இருந்தார்.அவருக்கு அடுத்து இர்பான் பதான் 64 ரன்களை சேர்த்தார்.
பின்னர் ஆடிய மேற்கு இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே இந்திய அணிக்குஅதிர்ச்சியளிக்கும் வகையில் அடித்து ஆடத் தொடங்கியது. தொடக்க வீரராக களம்இறங்கிய கெய்ல், புயல் வேகத்தில் ஆடி 45 ரன்களைக் குவித்தார்.
அவரது வேகத்திற்கு முனாப் பட்டேல் முட்டுக்கட்டை போட்டு பெவிலியனுக்குஅனுப்பினார்.
இதேபோல நட்சத்தி வீரர் சந்தர்பால் 6 ரன்கள் எடுத்த நிலையில், ஆர்.பி. சிங் பந்தில்படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த கேப்டன்லாராவும், சர்வானும் நிலைத்து நின்று ஆடத் தொடங்கினர். இவர்களைப் பிரிக்கமுடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர்.
20 ஓவர்களில் மேற்கு இந்திய அணி2 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்தநிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த்தி லூயிஸ் முறைப்படி ஆட்டத்தின் முடிவைதீர்மானிக்க நடுவர்கள் தீர்மானித்தனர். அதன்படி முதல் 20 ஓவர்களில் எந்த அணிஅதிக ரன்கள் சேர்த்திருந்தது என்று பார்த்தபோது, மேற்கு இந்திய அணி, இந்தியாவைவிட 29 ரன்கள் அதிகம் எடுத்திருந்தது.
இதையடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய அணி வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட்டது.
இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். சச்சின் அபாரமான சதம்அடித்தும் வெற்றி நழுவிப் போனதால் இந்திய வீர்ரகளும் ஏமாற்றமடைந்தனர். ஆட்டநாயகன் விருது சச்சினுக்குக் கிடைத்தது.
நாளை இந்தியா-ஆஸி மோதல்:
இதற்கிடையில் நாளை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்தியாஅணி விளையாட உள்ளது.
இதுவரை ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் 81 முறை மோதியுள்ளன. இதில்ஆஸ்திரேலியா அணி 49 போட்டிகளிலும், இந்திய அணி 27 போட்டிகளிலும்வென்றுள்ளது. 4 போட்டிகளின் முடிவு இல்லாமல் டிரா ஆயின.
நாளை இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கும். இதை ஜீஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது.












Click it and Unblock the Notifications